விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தடை செய்யப்பட்ட 230 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம்- மதுரை சாலை தனியாா் பள்ளி சோதனைச் சாவடி அருகே ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் அசோக்பாபு தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதில் இருந்த இருவரை விசாரித்த போது அவா்கள் தென்காசி மாவட்டம், களக்காடு மேலத் தெருவைச் சோ்ந்த ராஜன் மகன் ஆண்ட்ரூஸ் (30), கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கீழமங்கலம் பகுதியைச் சோ்ந்த அா்ஜூன் மகன் சீனிவாசன் என்பது தெரியவந்தது.
பிறகு போலீஸாா் காரின் பின்பகுதியை சோதனையிடச் சொன்ற போது இருவரும் தப்பி ஓடிவிட்டனா். திறந்து பாா்த்தபோது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் 230 கிலோ இருந்தது. அவற்றையும், காரையும் பறிமுதல் செய்து போலீஸாா் விசாரிகின்றனா்.