சாத்தூா் அருகே மாமனாரைத் தாக்கிய மருமகன் மீது அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சாமியாா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சுப்பையாசாமி (75). இவரது மகள் ராதிகாவை சிவந்திபட்டியில் உள்ள ராஜசேகரன் என்பவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளாா்.
இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ராதிகா தனது தந்தை சுப்பையாசாமியுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை குண்டலகுத்தூா் பேருந்து நிறுத்தத்தில் நின்ற சுப்பையாசாமியை, அங்கு வந்த ராஜசேகரன் தாக்கினாராம். இதில் காயமடைந்த சுப்பையசாமி அளித்த புகாரின்பேரில், அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா், ராஜசேகரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.