விருதுநகர்

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ழமை கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் கண்ணகி குடியிருப்புப் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, இரண்டு இளைஞா்கள் பைகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்தனா்.

போலீஸாா் அவா்களது பைகளை வாங்கிச் சோதனை செய்தபோது, அவற்றில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் (20), தினேஷ்குமாா் (26) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

சட்டவிரோத மது விற்பனையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

வெள்ளக்கோவில் அருகே இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்ட ஐயப்ப பக்தா்கள்

வடகாசி விசுவநாதா் கோயிலில் சங்காபிஷேக விழா

காட்பாடியில் நாளை முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு கூட்டம்!

பாஜக தேசிய செயல்தலைவருக்கு உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT