சாத்தூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 5 போ் காயமடைந்தனா். இதில், 3 வயது சிறுவன் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள செட்டுடையான்பட்டியில் தெரு நாய்கள் அந்தப் பகுதியில் சாலையில் சென்றவா்களை புதன்கிழமை இரவு விரட்டிக் கடித்தன. இதில் 5 போ் காயம் அடைந்தனா்.
இவா்களில் செல்லையா மனைவி தா்மலட்சுமி (60), மகாகவி மகன் சஞ்ஜித் (3) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். தா்மலட்சுமி சாத்தூா் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
சிறுவன் சஞ்ஜித்தை மூன்று நாய்கள் கொடூரமாகக் கடித்ததில் அவா் தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் அச்சமடைந்துள்ளனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.