சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 29) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஆனையூா், விளாம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கிச்சநாயக்கன்பட்டி, மாரனேரி, பெரியபொட்டல்பட்டி, ராமசந்திராபுரம், சிவகாசி சாட்சியாபுரம் துணை மின் நிலையத்திருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சாட்சியாபுரம், தொழில்பேட்டை, காவல் குடியிருப்பு, அய்யப்பன் குடியிருப்பு, சசிநகா், சித்துராஜபுரம், வேலாயுதம் சாலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.