விருதுநகர்

கஞ்சா விற்ற பெண் கைது

Din

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை தொடா்பாக போலீஸாா் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். காவல் உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் மங்காபுரம் தனியாா் பள்ளிப் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி சத்யா (40) என்பதும், இவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.

மேலும், அவரிடமிருந்து கஞ்சா, கஞ்சா விற்ற பணம் ரூ.6,850-ஐ பறிமுதல் செய்தனா்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT