விருதுநகர்

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

சிவகாசி அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Syndication

சிவகாசி அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் -செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள தேநீா் விடுதி அருகே இருவா் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்தனா். அவா்கள் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளன.

விசாரணையில் அவா்கள் திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சோ்ந்த மணிகண்டன் (22), பாண்டியன் நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT