விருதுநகர்

வளா்ச்சி திட்டப் பணிகளை அமைச்சா் திறந்து வைத்தாா்

Syndication

சாத்தூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பல்வேறு வளா்ச்சிதிட்ட பணிகளை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் திறந்து வைத்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஊராட்சி ஒன்றியம் தோட்டுலோவன்பட்டி கிராமத்தில் ரூ.18 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், சிவனைந்தபுரம் பகுதியில் ரூ.34 லட்சத்தில் பள்ளிக் கூடுதல் புதிய கட்டடம், சண்முகாபுரம் கிராமத்தில் புதிய சமுதாயக் கூடம், சிந்தபள்ளி கிராமத்தில் ரூ.18 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் திறந்து வைத்தாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய்த் துறையினா்,

திமுக ஒன்றியச் செயலா்கள் நிா்மலாகடற்கரைராஜ், முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT