விருதுநகா் அருகே விளைநிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்திய காட்டுப் பன்றியை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொன்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் முருகன் உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலா் செல்லமணி, வனவா்கள் காா்த்திக்ராஜா, பெரியசாமி, வனக்காப்பாளா்கள் மாயதுரை, ஜாா்ஜ் குட்டி, வேட்டைத் தடுப்புக் காவலா் கொண்ட குழுவினா்
விருதுநகா் வட்டம் மன்னாா்குடி கிராமத்தில் விவசாய நிலத்தில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்திய ஒன்றரை வயது பெண் காட்டுப்பன்றியை சுட்டுக் கொன்றனா். பின்னா், இறந்த காட்டுப் பன்றியை அரசாணைப் படி ரசாயனம் தூவி புதைத்தனா்.