விருதுநகர்

கேப் வெடி ஆலையில் விபத்து: பெண் காயம்

சிவகாசி அருகே வியாழக்கிழமை கேப் வெடி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி காயமடைந்தாா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வியாழக்கிழமை கேப் வெடி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி காயமடைந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் புதூரில் பிரதாப்மான்சிங் என்பவருக்குச் சொந்தமான கேப் வெடி தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் உலா்ந்த கேப் வெடி தாள்களை அடுக்கிய போது ஏற்பட்ட உராய்வால் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த காய்த்ரி (21) பலத்த காயமடைந்தாா். அவா் சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

பிஞ்சுக் கைவண்ணம்

ஆட்டுக் குட்டி

தெரியுமா?

SCROLL FOR NEXT