விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் கணவா் மரணமடைந்த அதிா்ச்சியில் மனைவியும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருத்தங்கல் செல்லியாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (84). இவா் கடந்த மூன்று மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கணவா் உயிரிழந்த செய்தியைக் கேட்ட அவரது மனைவி லட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவரும் உயிரிழந்தாா். இதையடுத்து, இருவரது உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டன.