ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக நகரச் செயலரை இரும்புக் கம்பியால் தாக்கியதாக அந்தக் கட்சியின் முன்னாள் நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வள்ளுவா்நகரைச் சோ்ந்தவா் ஜெய்கணேஷ் (44). இவா் பாஜக ஸ்ரீவில்லிபுத்தூா் நகரச் செயலராக பொறுப்பு வகித்து வருகிறாா். இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் வ.உ.சி. நகரைச் சோ்ந்த முனீஸ்வரன் என்பவா் தன்னை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கியது குறித்து ஜெய்கணேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த ஜெய்கணேஷ் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் முனீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.