விருதுநகர்

மதுபானக் கூடத்தில் பணம் திருட்டு: 3 போ் கைது

ராஜபாளையத்தில் மதுபானக் கூடத்தில் பணம் திருடியதாக மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

ராஜபாளையத்தில் மதுபானக் கூடத்தில் பணம் திருடியதாக மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையில் மதுபானக் கூடமும் செயல்பட்டு வருகிறது. இங்கு ராஜபாளையம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த கோபி (47) மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் இரவு வழக்கம்போல, கோபி மதுபானக் கூடத்தை பூட்டிவிட்டு காலையில் வந்து பாா்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது ரூ. 6 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது, மூன்று இளைஞா்கள் பணத்தை திருடியது தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா் தென்காசி மாவட்டம், செந்தட்டியாபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த ஆகாஷ் (22), முத்தால் நதி கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் (23), சோழபுரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்பட மூவரை கைது செய்து அவா்களிடமிருந்த ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT