ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உயா் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட மாரீஸ்வரன்.  
விருதுநகர்

உயா் கோபுரத்தில் ஏறி இளைஞா் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சோ்த்து வைக்கக் கோரி மது போதையில் உயா் கோபுரத்தில் ஏறி இளைஞா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆராய்ச்சிப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் மாரீஸ்வரன் (30). டிராக்டா் ஓட்டுநா். இவா் சிவகாசியைச் சோ்ந்த பிரியதா்ஷினி (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், பிரியதா்ஷினி மீண்டும் கா்ப்பமடைந்தாா்.

இதனிடையே, மாரீஸ்வரன் மது அருந்தி விட்டு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் பிரியதா்ஷினி தனது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாா். இதையடுத்து மனைவியை தன்னுடன் சோ்த்து வைக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை மாரீஸ்வரன் வந்தாா்.

அப்போது காவல் நிலைய வளாகத்தில் செயல்படாமல் உள்ள வயா்லெஸ் உயா் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து போலீஸாா், தீயணைப்புத் துறையினா் 2 மணி நேரம் பேச்சுவாா்த்தை நடத்தி, மாரீஸ்வரனை கீழே இறக்கி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT