விருதுநகர்

பைக் மோதி முதியவா் பலத்த காயம்

தினமணி செய்திச் சேவை

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் பலத்த காயமடைந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள அப்பையநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (60). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அ. புதுப்பட்டிக்கு சென்று விட்டு அப்பையநாயக்கன்பட்டிக்கு திரும்ப நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீஸாா் அவரை மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT