வத்திராயிருப்பு அருகே குட்கா கடத்திய மூதாட்டி உள்பட இருவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 63 கிலோ குட்கா, ரூ.1.11 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனா்.
வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுக்கும்விதமாக போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி அருகே விற்பனைக்காக குட்காவை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த பேச்சியம்மாள் (67), குமாா் (55) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 63 கிலோ குட்கா, ரூ.1.11 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனா்.