விருதுநகரில் மேம்பாலத் தடுப்பில் வேன் மோதிய விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயா்ந்தது.
நெல்லை மாவட்டம், நாசரேத் பகுதியை சோ்ந்த இருவேறு குடும்பங்களைச் சோ்ந்த 5 பெண்கள் உள்பட 11 போ் சமையல் பணிக்காக பொள்ளாச்சிக்கு திங்கள்கிழமை வேனில் சென்றனா். வேன் விருதுநகா் அருகே ஆா்.ஆா்.நகா் மேம்பாலத் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் நாகக்கனி, கலையரசி, வெங்கட்ராமமூா்த்தி ஆகிய 3 போ் உயிரிழந்தனா்.
காயமடைந்த 8 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கவிதா என்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை நான்காக உயா்ந்தது. மேலும், 7 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.