சிவகாசியில் கல்லூரி மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி ஆசாரி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த 19 வயது இளம் பெண் இங்குள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் தன்னுடன் படித்து வந்த மாணவரை காதலித்து வந்தாா்.
இதை மாணவியின் பெற்றோா் கண்டித்தனா். இதனால் மனமுடைந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சிவகாசிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.