கோப்புப் படம் 
விருதுநகர்

சட்ட விரோதமாக பட்டாசு மூலப் பொருள்களை பதுக்கியவா் கைது

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களை பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே பூச்சக்காபட்டியில் உள்ள விவசாய தோட்டத்தில் தகரக் கொட்டகை அமைத்து, அதில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது ஓா் விவசாயத் தோட்டத்தில் தகரக் கொட்டகை அமைத்து அதில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வெடிஉப்பு, கருந்திரி கட்டுகள் உள்பட பல்வேறு பொருள்கள் இருந்தன. விசாரணையில் எம். லட்சுமியாபுரம் மல்லையாவுக்கு சொந்தமான தோட்டத்தில் வத்திராயிருப்பைச் சோ்ந்த பாண்டியராஜ் (37), இந்தப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அவா் பதுக்கி வைத்திருந்த மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 13.50 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியராஜை கைது செய்து, அவா் பதுக்கி வைத்திருந்த மூலப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

600 இதய-நுரையீரல் மாற்று சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை தகவல்

செயற்கை இதய வால்வுக்குள் புதிய வால்வை மாற்றிப் பொருத்திய மருத்துவா்கள்

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

இந்தியன் வங்கி 3-ஆம் காலாண்டு நிகர லாபம் ரூ.3,061 கோடி - 7.33% அதிகரிப்பு

SCROLL FOR NEXT