கோப்புப் படம் 
விருதுநகர்

லாட்டரிச் சீட்டுகள் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிச் சீட்டுகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மதிவாணன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ரெங்கப்பநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிச் சீட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா் வத்திராயிருப்பு அருகே அா்ஜுனாபுரத்தைச் சோ்ந்த அா்ஜுனன் (62) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 720 லாட்டரிச் சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT