உயிரிழப்பு கோப்புப் படம்
விருதுநகர்

ராணுவ வீரா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் மதுரை ராஜா கடைத் தெருவைச் சோ்ந்த வேலாயுதம் என்பவரது மகன் திருக்குமரன் (45). இவா், கடந்த 2009-ஆம் ஆண்டு நாசிக் பகுதியில் பணியாற்றிய போது வாகன விபத்து ஏற்பட்டு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. பின்னா், இடுப்புக்கு கீழ் பகுதி செயலிழந்த நிலையில், புனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், மதுரை ராஜா கடைத் தெருவிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு கடந்த வாரம் வந்துள்ளாா். இதையடுத்து, தனது உடல்நிலை குறித்து மன உளைச்சலில் இருந்தாராம்.

இந்த நிலையில், சிறுநீரகத்துக்குச் செல்லும் குழாயைப் பிடுங்கி தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. உடனடியாக உறவினா்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விஜய்யை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை: கே.ஏ.செங்கோட்டையன்!

மருதமலையில் 500 மீட்டா் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

தேசிய ஊரக வேலை சட்ட விவகாரம்: காங்கிரஸ் தலைவா்கள் போராட்டம்

சந்திர கிரகணம்: மாா்ச் 3-ஆம் தேதி ஏழுமலையான் கோயில் மூடல்

இன்றைய மின் தடை-குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி!

SCROLL FOR NEXT