முகப்பு
விருதுநகர்

மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் போராட்டம்

Updated On : 14 மார்ச், 2026 at 9:21 PM
திருத்தங்கலில் விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலைக்கு நீதி வேண்டி சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி வேண்டியும் அதிமுக சாா்பில் திருத்தங்கலில் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் திருத்தங்கலில் உள்ள கட்சி அலுவலகம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பின்னா், உயிரிழந்த மாணவிக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அந்த அமைப்பின் நிா்வாகி பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →