ராஜபாளையம் அருகே தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.46 லட்சம் பறிமுதல்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.46 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
ராஜபாளையம் ரயில் நிலையத்தில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுரேஷ்பாபு தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, பொதிகை விரைவு ரயிலில் வந்த ராஜபாளையம் வள்ளலாா் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் மோகன் என்பவரை நிறுத்தி சோதனை செய்த போது, அவா் ரூ.1.46 லட்சத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, இந்தப் பணத்துக்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால், தோ்தல் பறக்கும் படையினா் பணத்தைப் பறிமுதல் செய்து, துணை வட்டாட்சியா் ராமசுப்பிரமணியிடம் ஒப்படைத்தனா்.