தனிநபர் கடன் மோசடி 
இணையம் ஸ்பெஷல்

தனிநபர் கடன் மோசடி! ஏமாறாமல் தப்பிக்கும் வழிகள்!

தனிநபர் கடன் மோசடியில் ஏமாறாமல் தப்பிக்கும் வழிகள் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

தனிநபர் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில், மோசடி கும்பல்கள் பலரிடமிருந்து செயல்பாட்டுக் கட்டணமாக பல லட்சங்களை வாரிச் சுருட்டும் மோசடிகள் நடந்தேறி வருகின்றன.

வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன்களைப் பெறுவதற்கு சிபில் ஸ்கோர், சில அடிப்படை தகுதிகள் முக்கியம் என்ற நிலையில் பலரும் தனியார் நிதி நிறுவனங்களை நாடுகிறார்கள்.

ஆனால், தனிநபர்களை, இதுபோன்ற தனியார் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் தொடர்புகொள்ளும் மோசடி கும்பல்கள், குறைந்த வட்டியில் பல லட்சம் வரை கடன் பெற்றுத் தருவதாகவும், நீங்கள் இத்தனை லட்சம் வரை கடன் பெற தகுதிபெற்றிருப்பதாகவும், தேவையென்றால் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆசைக்காட்டுகிறார்கள்.

அப்படித்தான், மேற்குவங்கத்தில் கோலக் மோண்டல் என்பவரை மோசடி கும்பல் ஒன்று, தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, தங்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் பெற தகுதியிருப்பதாகவும், கடன் வழங்குவதற்கான செய்முறைகளைத் தொடங்கலாமா என்றும் கேட்டுள்ளனர்.

அவரும், ரூ.20 லட்சம் கடன் பெற ஒப்புதல் அளித்து செய்முறைகளைத் தொடங்குமாறுக் கூறியுள்ளார். அதன்பிறகுதான் மோசடியாளர்களின் வேலை தொடங்கியிருக்கிறது.

தொடர்ந்து பல புதிய எண்களிலிருந்து பலரும் தொடர்புகொண்டு, கடன் தொகைப் பற்றி பல தகவல்களை அளித்து, இவரிடம் பல கேள்விகளைக் கேட்டு, உண்மையில் கடன் வழங்கப்படும் என அவரை நம்ப வைத்திருக்கிறார்கள். இறுதியில் ஆவண செயல்பாட்டுக் கட்டணமாக ரூ.3.8 லட்சத்தை செலுத்துமாறு வங்கி அதிகாரி போல ஒருவர் பேசியிருக்கிறார். அதை நம்பி. மோண்டலும் பணத்தை செலுத்தியிருக்கிறார்.

அவ்வளவுதான், அவருக்கு வந்த அனைத்து தொலைபேசி அழைப்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும், உடனடியாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து அவர் அளித்த புகாரில், ரூ.20 லட்சம் கடன் வழங்குவதாகக் கூறினார்கள். ஆவணங்களை அனுப்பினேன், அதன்பிறகு, பல எண்களிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன. கடன் ஒப்புதல் பெறவிருக்கிறது என்று கூறினார்கள். பிறகுதான், ரூ.3.8 லட்சம் அனுப்பச் சொன்னார்கள். நானும் அதனை நம்பி அனுப்பினேன். பிறகு, எனக்கு எந்த தொலைபேசி அழைப்பும் வரவில்லை. நான் அவர்களை தொடர்புகொண்டபோது, எனது அழைப்பு ஏற்கப்படவில்லை. அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டேன் என்பதை உணர்ந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

புகாரைப் பதிவு செய்துகொண்ட காவல்துறை, அனைத்து செல்போன் எண்களையும், பணப்பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்குகளையும் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில், கோலக் மோண்டல் ஒரே ஒரு முறை, தனுக்கு கடன் தருவதாகக் கூறிய நிறுவனத்தின் பெயரை இணையதளத்தில் பதிவிட்டுப் பார்த்திருந்தாலோ, அதன் உண்மையான அலுவலக முகவரி போன்றவற்றை சரிபார்த்திருந்தாலோ தப்பித்து இருக்கலாம்.

இதுபோன்ற தனிநபர் கடன் என்ற பெயரில் அதிக மோசடிகள் நடப்பதாகவும், செயல்பாட்டுக் கட்டணம் என்ற பெயரில் பல லட்சங்களை மக்கள் ஏமாறுவதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள். ஒரு நிதி நிறுவனம் பெயரில் இதுபோன்ற அழைப்புகள் வந்தால், அது பற்றி இணையதளத்தில் தேடலாம். அதுபற்றி மக்களின் கருத்துகளைப் பார்க்கலாம். உண்மையான அலுவலகம் இருக்கிறதா? அது பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனமா? என்றெல்லாம் யோசிக்காமல் கடன் கிடைக்கிறது என்பதற்காக தங்களது ஆவணங்களை எல்லாம் சமர்ப்பிப்பது மிகவும் தவறு என அறிவுறுத்தப்படுகிறது.

எதையும் ஆராயமல், எச்சரிக்கைகளை புறந்தள்ளி, சைபர் குற்றத்துக்கு ஆளாக வேண்டாம், அழையுங்கள் உதவி எண் 1930.

இதுபோன்ற சைபர் மோசடி குறித்த புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். பண மோசடியாக இருப்பின், உடனடியாக புகார் அளித்தால் பணத்தை மீட்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தம் நகரில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

குருகிராம்: சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஆற்காடு நகரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், 2 பசுமை பூங்காக்கள்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

பெண்ணைத் தாக்கி மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT