தனிநபர கடன் - பிரதி படம் ANI
இணையம் ஸ்பெஷல்

தனிநபர் கடன் மோசடியாளர்களைக் கண்டறிய 10 விஷயங்கள்!

தனிநபர் கடன் மோசடியாளர்களைக் கண்டறிய 10 விஷயங்களைப் பின்பற்றலாம்

இணையதளச் செய்திப் பிரிவு

எளிதாக, குறைந்த வட்டியில் தனிநபர் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பல மோசடிகள் நடந்து வரும் நிலையில், இதில் சற்று விழிப்புணர்வுடன் இருந்தாலே போதும் இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம்.

1. சூப்பர் சலுகைகள்

உண்மை என நம்பும் வகையில் சூப்பர் சலுகைகள் வழங்கப்படும். மற்ற எந்த நிதி நிறுவனங்களிலும் வழங்கப்படாத வகையில் குறைந்த வட்டி விதிப்பதாகக் கூறப்படும்.

2. முன்கூட்டியே செயல்பாட்டுக் கட்டணம்

கடன் தொகையிலிருந்துதான் பெரும்பாலும் செயல்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும். இல்லை தவணையிலிருந்து கழிக்கப்படும். ஆனால், மோசடியாளர்கள் செயல்பாட்டுக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தச் சொல்வார்கள்.

3. முகவரி மற்றும் செல்போன் எண்

ஒரு நிதி நிறுவனம் என்றால் அது செயல்படும் அலுவலகம் இருக்க வேண்டும். தொடர்புகொள்ள பொதுவான எண் இருக்க வேண்டும்.

4. பாதுகாப்பாற்ற இணையதளம்

பாதுகாப்பான இணையதளங்களுக்கு https என்று இருக்கும். மோசடியாளர்களின் இணையதளங்கள் அவ்வாறு எஸ் இல்லாமல் இருக்கும்.

5. அழுத்தம் கொடுப்பது

கடன் கேட்டவர்களுக்கு திடீரென அழுத்தம் கொடுப்பார்கள். உடடினயாக கடன் தொகை வழங்கப்படும், ஓரிரு நாள்களுக்குள் அனைத்தும் முடிந்துவிடும் என்று பதற்றமடைய வைப்பார்கள்.

6. சிபில் ஸ்கோர்

உங்கள் சிபில் ஸ்கோர் அல்லது கடன் நிலவரங்களைக் கண்டுகொள்ளாமல் கடன் வழங்குவதாக இருந்தால் கவனம்.

7. போலியான கருத்துகள்

போலியான இணையதளத்தில் போலியான நபர்களைக் கொண்டு கருத்துகளை போட்டிருப்பார்கள். எனவே, ஒரு இணையதளத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் அதனை விசாரிக்க வேண்டும்.

8. விதிமுறைகள்

விதிமுறைகளில் கவனமாக இருக்க வேண்டும். மோசடியாளர்களின் விதிமுறைகளில் குழப்பங்கள் இருக்கும்.

9. ஆவணங்கள் வேண்டாம்

எந்த ஆவணங்களையும் நேரடியாகப் பெற்றுக் கொள்ள வர மாட்டார்கள். டிஜிட்டல் முறையிலேயே பெற்றுக் கொள்வதாகக் கூறுவார்கள்.

10. இணையதள செயல்பாடு

மோசடியாளர்களின் இணையதளங்கள் அதிகம் பேரால் பார்க்கப்பட்டதாகவோ பயன்படுத்தியதாகவோ இருக்காது. மோசடியாளர்கள் இணையதளத்தில் அதிக நேரம் இணைந்திருக்க மாட்டார்கள்.

தனிநபர் கடன்களை மிக எளிதாகக் கண்டறியலாம். காரணம் குறைந்த வட்டி என்பதுதான். இவ்வளவு குறைந்த வட்டியை யாரும் கொடுக்க முடியாது என்றால், இவர்கள் கொடுப்பது ஏன் என்ற கேள்விதான் மோசடியிலிருந்து தப்பிக்க உதவும்.

10 things to follow to spot personal loan scammers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்நாடக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!

தூங்காத விழிகள் இரண்டு... ஸ்ரீநந்தா சங்கர்!

சீரற்ற சீர்... மன்மீத் கௌர்!

தமிழ்நாட்டின் 35-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக 16 வயது இளம்பரிதி!

கோவாவில் குதூகலம்... ரஜிஷா விஜயன்!

SCROLL FOR NEXT