தினமணி கதிர்

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 11: அருகம்புல் - ராகு கிரகம்

பெரும்பாலான இந்து சமுதாய மக்கள் வானவியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு நாளின் 24 மணி நேரத்தைப் பிரித்து இதில் மனிதனுக்கு அதிக அளவில் நன்மைதரும் நேரத்தையும், தீமை தரும் நேரத்தையும் தனித் தனியாக அடையாள

டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்

பெரும்பாலான இந்து சமுதாய மக்கள் வானவியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு நாளின் 24 மணி நேரத்தைப் பிரித்து இதில் மனிதனுக்கு அதிக அளவில் நன்மைதரும் நேரத்தையும், தீமை தரும் நேரத்தையும் தனித் தனியாக அடையாளம் காட்டி அதனைப் பின்பற்றி வருகின்றனர். தினசரி ஒன்றரை மணி நேரம் இராகு காலம் என்றும், ஒன்றரை மணி நேரம் எம கண்டம் என்றும் அதுவும் மிகவும் மோசமான நேரம் என்றும், ஒன்றரை மணி நேரம் குளிகை காலம் என்றும், இது சுமாரான கெட்ட நேரம் என்றும் அடையாளம் காட்டியிருக்கின்றார்கள். தினசரி காலண்டரில் அதன் அட்டவணை நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். அதன்படி பலர், நல்ல நேரத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகளைத் தொடங்குவார்கள். கெட்ட நேரங்களில் நல்ல காரியங்கள் செய்வதைத் தவிர்ப்பார்கள்.

  இந்த மூன்று கெட்ட நேரங்களில் ராகு காலத்தைப் பொதுவாகக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். இராகு என்பது ஒரு கிரகத்தின் பெயராகும். இந்த கிரகத்துக்கு ஆங்கிலத்தில் புளூட்டோ என்பார்கள். இந்த கிரகத்தின் செயல்பாடுகள் ஒன்றரை மணி நேரம் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. அதனால்தான் புளூட்டோ கிரகத்தின் நேரத்துக்கு இராகு காலம் என்பார்கள்.

  இராகு கிரகத்தினால் உண்டாகும் தோஷத்தை நீக்க இந்து சமுதாய மக்கள் நவக்கிரக ஆலயத்துக்கு சென்று இராகு பகவான் விக்கிரகத்தை வணங்கிவிட்டு, அருகம்புல்லைத் தொட்டு வணங்கிவிட்டு வருவார்கள்.

  அருகம்புல் இராகு கிரகத்துடன் தொடர்பு கொண்ட புல்வகைத் தாவரம் என்று யுனானி, சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன. உலகம் தோன்றிய நாள் தொட்டு உயிருடன் வாழும் ஒரே உயிர் அருகம்புல் மட்டுமே என சங்க இலக்கிய நூலான பட்டினப்பாலை கூறுகிறது.

  உண்மையில் அருகம்புல் இராகு கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் சேகரித்து வைத்துக் கொள்ளும், அதைத் தீர்த்தமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும்போது நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன் இராகு கிரக தோஷத்தையும் நீக்குகிறது என்று யுனானி மற்றும் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

  ஆரோக்கியமான மனிதர் ஒருவரின் 2 சிறுநீரகங்களும் சுருங்கிவிட்டது. டயாலிஸிஸ் செய்ய வேண்டும். கிட்னி மாற்ற வேண்டும் என்று டாக்டர்கள் கூறும்போது, எதனால் அந்தச் சிறுநீரகங்கள் சுருங்கிவிட்டன என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காமல் தத்தளிப்பார்கள். இது புளூட்டோ கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகளினால் உடல் ஆரோக்கியம் கெட்டு அதனால் சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுகின்றன என்று மூலிகை வானவியல் சாஸ்திரம் கூறுகிறது.

  எனவே மருத்துவ விஞ்ஞானம் சில நோய்களுக்கான காரணங்களுக்கு இன்னும் விளக்கம் அளிக்காமலேயே உள்ளது.

  அருகம்புல் முழு செடியும் மருந்தாகப் பயன் அளிக்கிறது. சிறுநீரில் இரத்தம் கசிதல், சிறுநீரகங்களில் கட்டிகள் தோன்றுதல், மேகம், வெட்டை, பால்வினை நோய்கள், எய்ட்ஸ், கிட்னி ஃபெயிலியர், லிவர் ஃபெயிலியர், சிறுநீரகக் கற்கள், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், அக்கி என்னும் தோல் நோய், உள் மூலம், நாக்கு வறட்சி, எரிச்சல் போன்ற நோய்களுக்கு மூலிகை மருத்துவர்கள் அருகம்புல்லைத் தருகின்றனர்.

  அருகம்புல்லையும், மஞ்சளையும் அரைத்து எக்ஸிமா, ரிங்வார்ம், படைகள், வண்டுக்கடி போன்ற தோல் நோய்கள் மீது களிம்பாகப் பூசுவார்கள். பொதுவாக 10 முதல் 20 மில்லி வரை அருகம்புல் சாற்றை மருந்தாக குடிக்கச் செய்வார்கள். அருகம்புல்லை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து பார்த்ததில் நச்சுக் கிருமிகளைக் கொல்லும் மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  அருகம்புல்லை பசையாக்கி, பெண்களுக்கு அடிவயிற்றில் பூசினால் அதிகமான இரத்தப் போக்குக் கழிவது உடனடியாகக் குறைகிறது. அருகம்புல் முழு செடி 200 கிராம், மிளகு 150 கிராம், சீரகம் 100 கிராம் என மூன்றையும் இடித்து 2 லிட்டர் எள் எண்ணெயில் கலந்து 15 நாட்கள் கடும் வெயிலில் வைக்க வேண்டும். 16 வது நாள் வடிகட்டிய எண்ணெயை மட்டும் பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். தினசரி தலையில் பூசி வந்தால் பலதரப்பட்ட கண்நோய்கள் குணம் பெறுகின்றன.

  யுனானி மருத்துவர்கள் அருகம்புல்லைப் பவுடராக்கி, வேளைக்கு 3 கிராம் சாப்பிடக் கொடுப்பார்கள். சிறுநீரக நோய்களுக்கு லேகியம், ஷர்பத் தயாரித்துக் கொடுப்பார்கள். இதனால் தடைப்பட்ட சிறுநீர் வெளியேறுவதுடன் சிறுநீரகங்களுக்கு வலிமையும் கிடைக்கின்றது.

  இராகு கிரகம், அடி வயிறு மற்றும் இன விருத்தி உறுப்புகளுடன் தொடர்பு கொண்டது. அக்டோபர் 22 முதல் நவம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும், திருவாதிரை நட்சத்திரம், சுவாதி நட்சத்திரம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் இராகு கிரக தோஷம் நீக்குவதற்கும் சிறந்த பரிகார மருந்து என்று மூலிகை வானவியல் சாஸ்திரம் கூறுகிறது.

  பஞ்ச பூதங்களில் இராகு கிரகம் நீருடன் தொடர்பு கொண்டது. இந்த கிரக காலத்தில் பிறந்தவர்களுக்கு நிலையான குணம் இருக்காது. பயந்த சுபாவத்துடன் காணப்படுவார்கள். இதைப் போக்க அருகம்புல்லைப் பயன்படுத்தலாம்.

  அருகம்புல்லைப் பொதுவாக எல்லா இடங்களிலும் காணலாம். விசேஷமாக வாணியம்பாடியில் உள்ள முகல் கார்டன் வானவியல் மூலிகைத் தோட்டத்திலும் வளர்த்து  வருகிறோம்.                      (தொடரும்)  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT