தினமணி கதிர்

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 35: உத்திரம் நட்சத்திரம்- அலரிச் செடி, மந்தாரை மரம்!

உத்திரம் நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் ஆரோக்கியத்தையும், கெட்ட கதிர்வீச்சுகள் நோய்களையும் தருகிறது. உத்திரம்  நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகளால் பொதுவாக தைராய்டு கட்டிகள், மூலக் கட்டிகள், த

டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்

உத்திரம் நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் ஆரோக்கியத்தையும், கெட்ட கதிர்வீச்சுகள் நோய்களையும் தருகிறது. உத்திரம்  நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகளால் பொதுவாக தைராய்டு கட்டிகள், மூலக் கட்டிகள், தொழுநோய், வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சிலந்தி நோய் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் காணப்படுகின்றன. இதற்கு கிராமங்களில் உத்திர நட்சத்திர தோஷம் என்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமை அல்லது ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 21 வரை பிறந்தவர்களுக்கு உத்திரம் நட்சத்திரம் ஆட்சி செய்கிறது.

அலரி ஐந்தடி முதல் பத்தடி வரை உயரமாக வளரும் இந்த மெல்லிய செடியில் கண்ணைக் கவரும் வாசமில்லாத அழகான பூக்கள் இருக்கும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய மூன்று நிறங்களில் கொத்து, கொத்தாக வளர்ந்து இருக்கும். இந்த மூன்று நிறங்களிலும் ஒரே வகையான குணம் காணப்படுகிறது. ஆயினும், சிவப்பு நிற அலரி அதிகப் பயனுள்ளதாக இருக்கின்றது. அலரிச் செடி உத்திரம் நட்சத்திரத்துடன் நெருக்கம் கொண்டது. நட்பு கொண்டது. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திரம் நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளை அலரிச் செடி தன் உடலில் சேர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதைத் தொடுபவர்களுக்கும் பயன்படுத்துபவர்களுக்கும் நல்ல கதிர்வீச்சுகளை மாற்றம் செய்கிறது.

அலரிச் செடியைக் கட்டிப் பிடித்தால், அதன் நிழலில் உட்கார்ந்தால் இந்தச் செடியைக் கொண்டு தயாரிக்கும் எண்ணெய்களைப் பூசிக் கொண்டால் உத்திரம் நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால் உண்டாகும் நோய்களும், தோஷமும் குணம் பெறும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அலரி வேரை பச்சைத் தண்ணீரில் அரைத்து மூலக் கட்டிகளின் மீது பூசி, அதன்பின் மூலக்கட்டிகளின் மீது படும்படி புகைப் பிடித்தால் மூலக்கட்டிகள் சுருங்கிவிடுகின்றன. சிலருக்கு ரத்தம் கெட்டுவிடுவதால் தோல் கரடு முரடாக மாட்டுத் தோல் போல் காணப்படும். இதற்கு அலரிச் செடியின் பட்டையை அரைத்துத் தினசரி தோல் மீது பூசுவதால் தோல் மென்மையாகிவிடும். இலைகளைக் கொதிக்க வைத்து அரைத்து எண்ணெய்யில்  கலந்து மூட்டு வலியின் மீது பூசினால் வலி குறைகிறது.

மந்தாரை மரம்

இதே போல மந்தாரை மரமும் உத்திர நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டது. இதை ஆத்தி மரம் என்றும் அழைப்பார்கள்.  தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மந்தாரை மரமும், நடுவில் அலரிச் செடிகளும் நடப்பட்டு இருப்பதைக் காணலாம். இதற்குக் காரணம் சூரிய வெப்பத்தை தார் ரோடு உறிஞ்சிக் கொள்ளும் போது, அலரிச் செடியும், மந்தாரைச் செடியும் அதைக் குளிர்ச்சியாக மாற்றி காற்றில் பரப்பி விடுகிறது என்று நிரூபணமாகியிருக்கிறது. அதைத்தான் வானவியல் மூலிகை சாஸ்திரத்தில் இந்த இரண்டு தாவரங்களும் சூரிய கிரகம் மற்றும் உத்திர நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்ட தாவரங்கள் என்று கூறுகிறது.

மந்தாரை மொட்டுகள் அதிகமான ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துகின்றன.

இச்செடியின் தண்டுப் பகுதியிலிருந்து வெளிப்படும் பிசின்,மாதுளை மரத்தின் மலர் ஆகியவற்றை எடுத்துக் கஷாயமிட்டுக் குடிப்பதால், தொண்டை  வறட்சி நீங்கி அதிக அளவில் உமிழ் நீர் சுரக்கும். தொண்டை வீக்கம், தொண்டைக்கட்டி, ஆஸ்துமா,அல்சர் நோயையும் குணப்படுத்துகிறது. இதன் வேர் பாம்பு விஷத்தை முறிக்கும்.

அலரிச் செடிகளையும் மந்தார மரங்களையும் எங்கும் பார்க்கலாம். விசேஷமாக வாணியம்பாடியில் டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்திலும் இம்மரங்கள் நன்கு வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது சிறப்பான செய்தியாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT