தினமணி கதிர்

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 29: திருவாதிரை நட்சத்திரம் - செங்கருங்காலி மரம்

நட்சத்திரங்களில், 2 நட்சத்திரங்களுக்கு மட்டும் 'திரு' என்று உயரிய வார்த்தை பயன்படுத்தப்படும். காரணம், அவற்றின் சிறப்பு கருதிதான் இந்த 'திரு' என்னும் அடைமொழியாகும். 1. திருவாதிரை நட்சத்திரம் 2. திருவோண

டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்

நட்சத்திரங்களில், 2 நட்சத்திரங்களுக்கு மட்டும் "திரு' என்று உயரிய வார்த்தை பயன்படுத்தப்படும். காரணம், அவற்றின் சிறப்பு கருதிதான் இந்த "திரு' என்னும் அடைமொழியாகும். 1. திருவாதிரை நட்சத்திரம் 2. திருவோணம் நட்சத்திரம் ஆகியவையே இந்தப் பெருமைக்குரியவை.

    வானத்தில் தாமரை மொட்டுப் போல பிரகாசிக்கும் நட்சத்திரம் திருவாதிரையாகும். இது மிதுனராசி மற்றும் புதன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன்கிழமை மற்றும் மே 21 முதல் ஜூன் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல நாட்கள் என்று வானவியல் சாஸ்திரம் கூறுகிறது. மேற்குறிப்பிட்ட நாட்களில் திருவாதிரை நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் பூமியின் மீது அதிக அளவில் வெளிப்படும். இந்த கதிர்வீச்சுகள் மக்களுக்குப் பலவகையில் நன்மையை அளிக்கின்றன.

   இதன் நச்சுத்தன்மை கொண்ட கதிர்வீச்சுகளால் மனிதனின் உடலும் உள்ளமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. முக்கியமாக முழங்கால் மூட்டுவலி, எலும்பு மூட்டுகள் தேய்மானம் போன்ற நோய்கள் உண்டாகின்றன. மேலும் கண் அழற்சி, வலிவீக்கம், இரத்த வாந்தி, பசியின்மை, தொழுநோய், வெண்குஷ்டம், மூலம், சர்க்கரைநோய், குடல் புழுக்கள், உடல் பலவீனம், ஆண்மைப் பிரச்னைகள், திருவாதிரை நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டவை.

   செங்கருங்காலி மரம், திருவாதிரை நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளைத் தன் உடலுக்குள் சேமித்து வைத்துக் கொள்கிறது. நச்சுத்தன்மை கொண்ட கதிர்வீச்சுகளை அழிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் நோயைக் குணமாக்க செங்கருங்காலி மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப் பிடிக்கலாம் அல்லது அதன் நிழலில் உட்காரலாம். அம்மரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிடலாம். இதனால் திருவாதிரை நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால் உண்டான நோய்களும், மனப்பிரச்னைகளும் குணம் பெற்றுவிடுகின்றன.  மரத்தின் நல்ல கதிர்வீச்சுகளால் உடலுக்கு வலிமையும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கின்றது. இந்த மரம் மனித உடலில் தன் மின்காந்த சக்தியை எளிதில் மாற்றம் செய்கிறது.

   கிராமங்களில் கருங்காலி, செங்கருங்காலி, வெள்ளைக் கருங்காலி என்ற மூன்று வகையான மரங்கள் தானாகவே வளர்கின்றன. பார்ப்பதற்கு கருவேலன் மரத்தைப் போல் தோற்றம் அளிக்கும். சீப்பு வடிவில் மெல்லிய இலைகள், முட்கள் நிறைந்த மெல்லிய கிளைகளில் பூக்கள், அத்துடன் தண்டில் கருவேலன் காயைப் போல், சப்பையான காய்கள் தோன்றும். ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும். இந்த மரம் திருவாதிரை நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுகளைத் தன் உடலில் சேமித்து வைத்து அதனைத் தொடுபவர்களுக்கு மாற்றல் செய்கிறது. இந்த மரத்தின் நடுப்பகுதியில் இருந்து காசிக்கட்டி தயாரிக்கப்படுகிறது. அதை வெற்றிலை பாக்குடன் கலந்து சாப்பிடுவார்கள். இந்த மரத்தின் நிழலில் உட்கார் வதாலும், 30 நிமிடங்கள் கட்டிப் பிடிப்பதாலும், இம்மரத்தினால் தயாரிக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிடுவதாலும், திருவாதிரை நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால் உண்டான நோய்களும், நட்சத்திர தோஷமும் நீங்குகிறது. இம்மரங்களைப் பழங் காலத்தில் கோயில் கட்டுமானப் பணிகளுக்குப் பெருமளவு பயன்படுத்தி யுள்ளார்கள்.  இதன் பயன்கள் :

* இலைகளை கால்நடைகளுக்குத் தீவனம் போடுவார்கள்.

ப்  புதிய பட்டையும் சாறுடன், பெருங்காயத்தை சேர்த்து சாப்பிட்டால் இரத்த வாந்தி கட்டுப்படும்.

* வேரை அரைத்துச் சாப்பிடுவதால் மூட்டுவாதம் குணம் பெறுகிறது.

*  கத்தக் காம்பு என்னும் காசிக்கட்டி உஷ்ணத்தால் உண்டாகும் பேதி, சீதபேதியைக் கட்டுப்படுத்தும். காசிக்கட்டியை இடித்து 60 மி.லி. தண்ணீரில் ஊற வைத்து காலையில் வடிகட்டி குடிப்பார்கள்.

* காசிக்கட்டி மற்றும் கொட்டைப் பாக்கு இரண்டையும் சம அளவில் அரைத்து ஆடுகின்ற பற்கள், ஈறுகளின் மீது தேய்த்தால் கெட்டியாகிவிடும். ஈறு வீக்கம் மற்றும்  இரத்தக் கசிவு கட்டுப்படும்.

*  காசிக்கட்டியை 1 கிராம் முதல் 2 கிராம் வரை மருந்தாகச் சாப்பிடலாம்.

*  பிரபல யுனானி கம்பெனிகள் சீமைக் காசிக்கட்டியைக் கொண்டு ஜரூர் குலா, சனூன் முஸ்தஹகம் தந்தான், ஹப்பேலீமு என்ற பெயரில் மருந்துகள் தயாரித்து விற்கின்றனர். இதனையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.   

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT