முகப்பு
தினமணி கதிர்

பண்டிகை : "நவ' டிப்ஸ்!

சுண்டல் செய்வதற்கு கொண்டைக் கடலையை ஊற வைக்க மறந்து விட்டால் ஒன்றும் பதறத் தேவையில்லை. கொண்டைக் கடலையை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்த பிறகு குக்கரில் வேகவைத்தால் நன்றாக வெந்து விடும். * கடலைப் பருப்பு ச

Updated On : 20 செப்டம்பர், 2012 at 11:06 PM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2023 at 9:05 PM

சுண்டல் செய்வதற்கு கொண்டைக் கடலையை ஊற வைக்க மறந்து விட்டால் ஒன்றும் பதறத் தேவையில்லை. கொண்டைக் கடலையை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்த பிறகு குக்கரில் வேகவைத்தால் நன்றாக வெந்து விடும்.

* கடலைப் பருப்பு சுண்டல், பாசிப்பருப்பு சுண்டல் செய்யும்பொழுது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே ஊற வைத்து செய்தால் சுலபமாக வெந்துவிடும்.

* சுண்டல் செய்யும்  தானியங்களை முளை கட்ட  வைக்க நனைத்து ஊறிய தானியங்களை ஒரு துணியில் போட்டு முடிச்சு போட்டு ஒரு கிண்ணத்தில் வைத்து வலைத்தட்டு ஒன்றினால் மூடி வைத்தால் சீக்கிரமாக முளை வரும்.

Advertisement

* பயத்தம் பருப்பு சுண்டல் குழையாமல் இருக்க, அதை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பின், அடுப்பில் வெந்நீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அடுப்பை அணைத்துவிட்டு ஊற வைத்த பருப்பைப் போட்டு மூடி பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்து தாளித்தால் பருப்பு உதிரி உதிரியாக வரும்.

* எந்த வகைச் சுண்டல் செய்தாலும் கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் இஞ்சியையும் சேர்த்து விழுதாக்கி கலந்து கிளறி இறக்கினால் சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.

* முட்டை ஓட்டுக்குள் மணலைப் பரப்பி, துவாரத்தை மூடி, பழைய நியூஸ் பேப்பர், வழவழப்பான பேப்பர்களிலிருக்கும் அழகிய முகங்கள் பறவைகள் போன்றவற்றை வெட்டி எடுத்து ஒட்டி வரிசையாக கொலுப் படியில் வைக்கலாம்.

* நவராத்திரிக்கு ஒரு வாரம் முன்பே ஐஸ்கிரீம் கப்புகளில் மண்ணுடன் கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு கடுகு, வெந்தயம், கேழ்வரகு கலந்து ஒரு நாள் ஊற வைத்து பிறகு கவனமாக சுற்றித் தெளியுங்கள். கம்பீரமாக பயிர் வளரும். இந்தப் பயிர் கப்புகளை படிகளின் ஓரங்களில் வைத்தால் எடுப்பாக இருக்கும்.

* பளபள சமிக்கிகளை எவர்சில்வர் தாம்பாளத்தில் தூவி ஒட்டிவிட்டு காய்ந்தவுடன் தண்ணீர்விட்டு குளம் செய்து வெளிச்சம்படும்படி வைத்தால் குளம் மின்னும். ஸ்டிக்கர் கோலங்கள் பல்வேறு டிசைன்களில் கிடைப்பதை வாங்கி கொலு பக்கவாட்டு படிகளில் ஒட்டினால் கலர்புல்லாக இருக்கும்.

* ஒரு தாம்பாளத்தில் மரக்கடையில் கிடைக்கும் மரத்தூளை வாங்கி பரப்பி அதில் சிறிதளவு பச்சைக் கலர் மையைத் தெளித்து பரப்பி வைத்தால் அழகான புல்வெளி ரெடியாகிவிடும். பழுதாகிப் போன டார்ச் லைட்டை கலர் பேப்பரை ஒட்டி ஸ்தூபி போல் அமைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.