வானத்தில் உள்ள திருவோணம் நட்சத்திரங்களின் தொகுப்பு வாள், உலக்கை மற்றும் நிலம் அளக்கும் முழங்கோல் வடிவில் அமைந்திருப்பதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோற்றம் கம்பீரமாகவும், உள்ளங்கால்கள் உயரமாகவும் இருக்கும்.
திருவோணம் நட்சத்திரம் முழங்கால் மூட்டும், அதிலிருந்து கீழ்நோக்கி பாதி கெண்டைக்கால் பகுதிகளில் உள்ள தோல், நரம்புகள், எலும்புகள் என அனைத்துப் பகுதிகள் மீது பாதிப்புகளை விளைவிக்கச் செய்கிறது.
திருவோணம் நட்சத்திரம் மகரம் ராசி, சனி கிரகத்துடன் தொடர்பு கொண்டது. சனிக்கிழமை பிறந்தவர்களுக்கும், டிசம்பர் 21 முதல் ஜனவரி 19 வரை பிறந்தவர்களுக்கும் திருவோணம் நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. அன்றைய தினம் திருவோணம் நட்சத்திரத்தின் கதிர்வீச்சுக்கள் பூமியில் அதிக அளவில் படுகிறது.
திருவோணம் நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால் உடல் பலவீனம், குளிர் காய்ச்சல், எலும்புருக்கி நோய், கண்வலி, அசதி, இளைப்பு, வாய்ப்புண் போன்ற நோய்கள் உண்டாகின்றன.
கிரகம், ராசி,நட்சத்திரங்களுடன் மரங்களுக்கு தெய்வீகத் தொடர்புகள் இருக்கின்றன. திருவோணம் நட்சத்திரத்துடன் எருக்கன் செடி மிகவும் நெருக்கத்தைக் கொண்டிருக்கும். மேற்கண்ட காலங்களில் திருவோணம் நட்சத்திரத்தின் கதிர்வீச்சுகள் பூமியில் அதிக அளவில் படும்போது, எருக்கஞ்செடி அதைச் சுவாசித்து தன் உடலுக்குள் சேமித்து வைத்துக் கொள்கிறது. அந்தச் செடியை சுவாசிக்கும்போது திருவோணம் நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுக்களும், நலம் தரும் கதிர்வீச்சுகளாக மாறி மனிதர்களுக்கு பயன்தரும் செடியாக மாற்றமடைகிறது. இதைத்தான் மருத்துவக் குணங்கள் என்பார்கள்.
எருக்கஞ் செடிகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை எருக்கன், இரண்டாவது சாதாரண சிவப்பு எருக்கன். வெள்ளை எருக்கன் செடியை நவக்கிரக ஆலயங்களில் வைப்பார்கள். மற்ற வகை எருக்கன், சாதாரணமாக எல்லா இடங்களிலும் தானாகவே விளையும்.
எருக்கன் செடி திருவோணம் நட்சத்திரத் தோஷத்தை நீக்குவதுடன் அதன் கெட்ட கதிர்வீச்சுக்களால் உண்டாகும் நோய்களையும் குணமாக்குகிறது. எருக்கன் செடிகளைக் கட்டிப்பிடிக்கலாம். அதன் நிழலில் உட்காரலாம். இதனால், திருவோணம் நட்சத்திரத்தின் உயிர் சக்தியை மனித உடலுக்கு வெள்ளை எருக்கன் செடி மாற்றிவிடுகிறது.
மூலிகை மருத்துவர்கள் எருக்கன் செடியின் அனைத்துப் பகுதிகளையும் பக்குவப்படுத்தி மருந்தாகத் தயாரித்துக் கொடுக்கின்றனர்.
எருக்கன் செடியின் மருத்துவக் குணங்கள்
இலைகள் : எருக் கன் செடி யின் இலைகளை எரித்து, அதன் புகையை முகர்ந்தால், வாய் வழியாகச் சுவாசித்தால், மார்புச் சளி வெளியேறும். ஆஸ்துமா, இருமல் கட்டுப்படும்.
இதன் இலைகள், பூக்கள், வேர், பட்டைகள், எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை.
மொட்டுகள் : இதன் மொட் டு கள், சுக்கு, ஓமம், கறுப்பு உப்பு ஆகியவற்றை மெல்லியதாகப் பொடியாக்கி, சிறிதளவு தண்ணீர் கலந்து பட்டாணி அளவிற்கு மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். தினசரி இரண்டு மாத்திரைகள் வீதம் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம், பசியின்மை, வாயு கோளாறு, வயிறு உப்புசம் ஆகியவை கட்டுப்படும்.
பூக்கள் : காலரா, வயிற் றுப் போக்கு, வாந்தி, குமட்டல் போன்றவற்றால் உடல் பலவீனம் அடைவதிலிருந்து காக்க இரண்டு எருக்கம் பூக்களை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும்.
பால் : எருக் கம் பால் தலைப் பொடுகு, படை, மூட்டு வலி கள், மூட்டு வீக்கம், மூலநோய்க்கு மருந்தாகப் பயன்தருகிறது.
எருக்கு மரத்தைக் கொண்டு பலவகையான யுனானி மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. இதையும் பயன்படுத்தலாம்.
வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் வானவியல் மூலிகைத் தோட்டத்தில் எருக்கன் செடி பெருமளவில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. அவற்றை அங்கே காணலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.