நெட் ஜோக்ஸ்
பக்கத்து வீட்டுக்காரர் தன்னுடைய பையனை புகழ்ந்து தட்டிக் கொடுத்து உற்சாகத்தோடு இருப்பதைப் பார்த்தவர்,"" என்ன நடந்தது? அதிக சந்தோஷமாக இருக்கிறீர்களே?'' என்று கேட்டார். பக்கத்துவீட்டுக்காரர் சொன்னார்,""எ
பக்கத்து வீட்டுக்காரர் தன்னுடைய பையனை புகழ்ந்து தட்டிக் கொடுத்து உற்சாகத்தோடு இருப்பதைப் பார்த்தவர்,""
என்ன நடந்தது? அதிக சந்தோஷமாக இருக்கிறீர்களே?'' என்று கேட்டார். பக்கத்துவீட்டுக்காரர் சொன்னார்,""என்னுடைய பையன் புத்திசாலியாக மாறிவருகிறான். ஐந்தும் ஐந்தும் எவ்வளவு என்று கேட்டேன். எட்டு என்று சொல்கிறான்''
""இது தவறான விடையல்லவா?'' என்று கேட்டார் வந்தவர். ""ஆமாம். எனக்கும் தெரியும். ஆனால் நேற்று இதே கேள்வியை கேட்டதற்கு ஆறு என்று சொன்னான். இன்று கொஞ்சம் முன்னேறியிருக்கிறான் அல்லவா?'' என்று பதில் சொன்னார் பக்கத்து வீட்டுக்காரர்.
இரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் சொன்னாள்: ""அம்மா! இன்றைக்கு நாங்கள் எல்லோரும் குழந்தைகள் எப்படி உருவாக்குவது என்று தெரிந்து கொண்டோம்.'' அதிர்ச்சியடைந்த அம்மா, அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,""நல்ல விஷயம்தான். எப்படி உருவாக்குகிறார்கள்?'' என்று கேட்டாள். ""ரொம்ப சுலபம் அம்மா. குழந்தை என்று சொல்லுகிறோம் அல்லவா? கூடவே "கள்' என்று சேர்த்துக்கொண்டால் போதும். குழந்தைகள் ஆகிவிடும்'' என்று சொன்னாள் சிறுமி.
வயதான இரண்டு தம்பதியர் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்த்து, ""பிரெட், கடந்த மாதம் நீங்கள் ஞாபக மறதிக்காக சிகிச்சை பெற்றீர்களே, எப்படியிருந்தது?'' என்று கேட்டார். ""மிகப் பிரமாதம்!'' ப்ரெட் சொன்னார். ""மனோதத்துவத்தில் நவீன பயிற்சிகளை எனக்களித்தது வித்தியாசமாக இருந்தது.''
""அப்படியா அந்த மருத்துவமனையின் பெயர் என்ன?''
எவ்வளவு முயற்சித்தும் ப்ரெட்டிற்கு மருத்துவமனையின் பெயர் நினைவுக்கு வரவில்லை. பின்னர் தயக்கத்துடன் அவரைப் பார்த்து ப்ரெட் கேட்டார். ""நீளமான கம்புடன் முள்ளுடன் மலர் இருக்குமே, அதன் பெயர் என்ன?'' ""ரோஸ்'' என்றார் அவர். ""ஆமாம். அதுதான்'' என்று சொன்ன ப்ரெட் அவரது மனைவி பக்கம் திரும்பி, ""ரோஸ்! அந்த மருத்துவமனையின் பெயர் என்ன?'' என்று கேட்டார்.
டாம் மற்றும் ஹேரி இருவரும் சுரங்க நிறுவனமொன்றில் வேலைக்கான நேர்காணலுக்குச் சென்றிருந்தனர். காத்திருப்பு அறையில் காத்திருந்தபோது ஹேரியை முதலில் கூப்பிட்டனர். சுரங்க தலைமையதிகாரி ஹேரியைப் பார்த்து கேட்டார், ""இதற்கு முன்பு பூமிக்கு அடியில் ஏதாவது சுரங்கத்தில் பணியாற்றியிருக்கிறீர்களா?'' ""ஆமாம்'' என்றான் ஹேரி. ""எவ்வளவு ஆழம் வரை சென்றிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார் அதிகாரி. ""எட்டு அல்லது பத்தடி வரை'' என்றான் ஹேரி. ""சுரங்கம் என்றால் மிகவும் ஆழமானது. நீ சொல்லும் ஆழத்தைப் பார்த்தால் இதுவரை சுரங்க வேலைக்கே சென்றதில்லை என்று நினைக்கிறேன். நீ போகலாம்'' என்று அனுப்பிவிட்டார். வெளியே வந்த ஹேரி, டாமைப் பார்த்து, ""உள்ளே அவர்கள் கேட்பதைப் பார்த்தால் ரொம்பவும் ஆழம் வரை சென்று வேலை பார்த்ததாக சொன்னால்தான் வேலை கிடைக்கும்போல் தோன்றுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் பதில் சொல்'' என்று கூறிச் சென்றான்.
டாம் உள்ளே சென்றவுடன் ஹேரியிடம் கேட்கப்பட்ட அதே கேள்வியைக் கேட்டார் அதிகாரி, ""நிறைய அனுபவம் இருக்கிறது. 20 ஆயிரம் அடி வரை பூமிக்கடியில் சென்றிருக்கிறேன்'' என்று சொன்னான் டாம். ""20 ஆயிரம் அடியா? வாவ்! இது மிகப்பெரிய விஷயம்தான்'' என்று ஆச்சரியப்பட்ட அதிகாரி கேட்டார், ""அவ்வளவு ஆழம் செல்லும்போது எந்தவிதமான விளக்கைப் பயன்படுத்துவாய்?''
""விளக்கா? நான் அதெல்லாம் பயன்படுத்தியதே கிடையாது. ஏனெனில் நான் வேலை பார்த்தது பகல் ஷிப்ட்டில்தானே'' என்றான் டாம்!
கால் டாக்ஸியில் பின் சீட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஏதோ கேள்வி கேட்பதற்
காக டிரைவரின் தோளைத் தட்டினார். அலறி அடித்த டிரைவர்,நிலை தடுமாறி காரைக் கொண்டுபோய் பஸ்ஸின் மேல் இடிக்கச் சென்று சமாளித்து ஒரு கடை வாசலைத் தொட்டபடி பிரேக் பிடித்து காரை நிறுத்தினார். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் டிரைவர் சொன்னார், ""இதோ பாருங்க. இன்னொரு முறை இப்படிச் செய்யாதீங்க. நான் மிகவும் பயந்துவிட்டேன்.'' ""வெரி ஸôரி! தொட்டுக் கூப்பிட்டதற்கு இப்படி பயப்படுவீர்களென்று நான் நினைக்கவில்லை'' என்றார் பயணி. ""பரவாயில்லை. உண்மையில் இது உங்களுடைய தவறு இல்லை. இன்றுதான் நான் முதன்முதலாக கால் டாக்ஸி டிரைவராக பொறுப்பேற்றிருக்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக உயிரற்றவர்களை எடுத்துச் செல்லும் அமரர் ஊர்தியை ஓட்டிக் கொண்டிருந்தேன். அதனால்தான் திடீரென தோளைத் தொட்டவுடன் பயந்துவிட்டேன்'' என்றார் டிரைவர்.
கணவன், மனைவி இருவரும் கிராமத்தில் உள்ள தங்கள் உறவினர்களைப் பார்க்க காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் சேறும் சகதியுமாக இருந்த பாதையில் கார் சிக்கிக் கொண்டது. சேற்றிலிருந்து காரை எடுக்க முயற்சித்தபோது எதிரில் ஒரு விவசாயி மாடுகளுடன் வருவதைப் பார்த்தனர். இவர்கள் அருகில் வந்த விவசாயி சேற்றிலிருந்து காரை வெளியே எடுக்க 20 டாலர் கொடுத்தால் போதுமென்று கூறினான். இருவரும் ஒப்புக்கொள்ள சில நிமிடங்களில் கார் சேற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.
""இன்று காலையிலிருந்து இந்த சேற்றில் சிக்கிக் கொண்ட கார்களை மீட்டுக் கொடுத்தவகையில் உங்களுடையது பத்தாவது கார்'' என்று விவசாயி சொன்னான். சுற்றிலும் இருந்த வயல்வெளிகளைப் பார்த்த அவர்கள் ""அப்படியானால் நீ உன்னுடைய வயலில் எப்போதுதான் வேலை செய்வாய்? இரவிலா?'' என்று கேட்டனர். ""இரவில் இந்தப் பள்ளத்தை தண்ணீர் ஊற்றி சேறாக்குவதற்கே நேரம் சரியாக இருக்கும்'' என்றான் அவன்.