தினமணி கதிர்

புது சமையல்: குடமிளகாய்ப் பொங்கல்

தேவையானவை: குடமிளகாய் - 300 கிராம், பச்சைப் பட்டாணி - 300 கிராம் அரிசி - 200 கிராம், தக்காளிப் பழம் - 1 முந்திரிப் பருப்பு - 10, லவங்கப்பட்டை - சிறிதளவு ஏலக்காய் - 4, சிறிய மிளகாய் வற்றல் - 10 சீரகம்

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

குடமிளகாய் - 300 கிராம், பச்சைப் பட்டாணி - 300 கிராம்

அரிசி - 200 கிராம், தக்காளிப் பழம் - 1

முந்திரிப் பருப்பு - 10, லவங்கப்பட்டை - சிறிதளவு

ஏலக்காய் - 4, சிறிய மிளகாய் வற்றல் - 10

சீரகம் - 1 தேக்கரண்டி, நெய் - 6 மேஜைக்கரண்டி

மஞ்சள் பொடி - சிறிதளவு, கடுகு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையானது.

செய்முறை:

அரிசியை நீர் விட்டுக் களைந்து எடுத்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை உரித்து நீரில் போட்டுக் கொண்டு குடமிளகாயைத் துண்டுகள் செய்ய வேண்டும். ஒரு வாணலியில் சிறிது நெய்விட்டு முதலில் முந்திரியை வறுத்துக் கொண்டு, அரிசி, பட்டாணி இரண்டையும் போட்டு வறுபட்டவுடன் நீர் விட்டு உப்பைப் போட்டு வேக வைக்க வேண்டும்.

மிளகாய் வற்றல், சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய் சிறிதளவு உப்பு ஆகியவற்றை அரைத்து மிளகாயில் கலந்துகொள்ள வேண்டும். தக்காளிப் பழத்தை அலம்பிச் சிறிய துண்டுகள் செய்து, ஒரு வாணலியில்  எண்ணெய்விட்டு கடுகைப் போட்டு வெடித்தவுடன் தக்காளிப் பழம், மிளகாய், மஞ்சள் பொடி முதலியவற்றைத் தாளித்துச் சேர்த்து வதக்கி வெந்த சாதத்தில் கலந்து முந்திரி, நெய், கறிவேப்பிலை சேர்த்தால் குடமிளகாய்ப் பொங்கல் தயார்.

ஒவ்வொருவரின் கார விருப்பத்திற்கேற்ப குடமிளகாயைக் குறைத்தும் அதிகமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT