துருவல்
எந்தப் பார்ட்டிக்குச் சென்றாலும் அசந்து தூங்குவது ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் வழக்கம். பார்ட்டி ஒன்றில் பலமணி நேரம் தூங்கிவிட்ட ஹிட்ச்காக்கை அவரது மனைவி எழுப்பி,""நேரமாகிவிட்டது. போகலாம் வாருங்கள்'' என்றழ
எந்தப் பார்ட்டிக்குச் சென்றாலும் அசந்து தூங்குவது ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் வழக்கம். பார்ட்டி ஒன்றில் பலமணி நேரம் தூங்கிவிட்ட ஹிட்ச்காக்கை அவரது மனைவி எழுப்பி,""நேரமாகிவிட்டது. போகலாம் வாருங்கள்'' என்றழைத்தார். கண் விழித்த ஹிட்ச்காக் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னாராம்,""இப்போதுதான் ஒரு மணி ஆகிறது. இப்போது கிளம்பினால் பார்ட்டி பிடிக்கவில்லை போலிருக்கிறது, அதனால்தான் கிளம்புகிறார்கள் என்று தவறாக அல்லவா நினைப்பார்கள்'' என்றார்.
பிரபல மர்மநாவல் ஆசிரியை அகதா கிரிஸ்டி(1896-1976)யின் முழுப்பெயர் தேம் அகதா மேரி கிளாரிஸô கிரிஸ்டி. இவர் நாவல்களை எங்கு அமர்ந்து எழுதுவார் தெரியுமா? ஆப்பிளை சாப்பிட்டபடியே குளியலறை தொட்டியில் அமர்ந்து எழுதுவார். முதலாம் உலகப்போரைப் பற்றி தீவிரமாக ஆய்வு செய்த இவர் மருத்துவமனை பார்மசி ஒன்றில் வேலை பார்த்தபோது விஷங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் தெரிந்து வைத்திருந்தார்.
1857-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 46 வயது ஹென்றி நெஸ்லே, பிறந்து ஓராண்டிலேயே அதிகமான குழந்தைகள் இறப்பதற்கு பெரும்பாலான பெண்கள் தாய்ப்பால் கொடுக்க மறுப்பதே காரணமென்று கண்டறிந்தார். அப்போதெல்லாம் குழந்தை உணவை டாக்டர்கள்தான் விற்பனை செய்வார்கள். முதன்முறையாக நெஸ்லே என்பவர்தான் தயாரித்த "கான்சென்ட்ரேட்டர்' பாலை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கினார். 1875-ஆம் ஆண்டில் குழந்தைகள் உணவை விற்பனை செய்யத் தொடங்கிய நெஸ்லே 1890-ஆம் ஆண்டில் இறக்கும் வரை வேறு எந்தப் பொருளையும் தயாரிக்கவில்லை. ஐரோப்பாவிலேயே முதன்முறையாக "கன்டென்ஸ்ட் மில்க்' தயாரித்ததோடு சாக்லெட்டையும் தயாரித்து வீட்டுப் பொருள்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது!
"அனிமல் பார்ம்' மற்றும் "1984' போன்ற படைப்புகளை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் எழுத்தாளராவதற்கு முன்பு போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றியுள்ளார்.
1833-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்த ஆல்பிரட் நோபல் சிறுவயதிலேயே ரஷ்யாவுக்குச் சென்றுவிட்டார். 16 வயது வரை வீட்டிலேயே ஆசிரியரை வைத்து கல்வி கற்ற நோபல், பின்னர் அவரது தந்தை நடத்தி வந்த ராணுவ ஆயுத உற்பத்திச் சாலையில் பணியில் சேர்ந்தார். 1850-ஆம் ஆண்டில் நைட்ரோ கிளிசரின் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை பயன்படுத்துவதில் நோபல் தீவிரமாக ஈடுபட்டார். தன்னுடைய சகோதரர் இமிலுடன் ஸ்வீடன் சென்ற நோபல் அங்கு வெடிபொருள் ஆய்வு பரிசோதனைக்
கூடம் ஒன்றில் பணியில் அமர்ந்தார். 1864-ஆம் ஆண்டு அந்த பரிசோதனைக்கூடம் வெடித்துச் சிதறியதில் இமில் இறந்துபோனார். இந்த சம்பவத்திற்கு பின்னரும் வெடிபொருள் ஆராய்ச்சியில் நோபல் தொடர்ந்து ஈடுபட்டு 1867-ஆம் ஆண்டில் "டைனமைட்'டைக் கண்டுபிடித்தார். இதனால் பிரபலமடைந்த நோபல் டைனமைட்டைக் கண்டுபிடித்ததற்கான பாராட்டைப் பெறுவதைவிட தன்னிடமிருந்த பணத்தை சமூக நலனுக்காக பயன்படும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் விஞ்ஞானிகளுக்கும், உலக சமாதானத்திற்காக பாடுபடுபவர்களுக்கும் பரிசு வழங்குவதற்காக நோபல் பவுண்டேஷனை தொடங்கினார்.