தினமணி கதிர்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: மூச்சுவிடச் சிரமமா? சுவாசப் பயிற்சி செய்யுங்கள்!

கடந்த சில வருடங்களுக்கு முன் எனக்குக் கடுமையான அம்மை நோய் கண்டது. அதற்குப் பின் மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம். மார்பை இறுக்கிப் பிடிப்பது போன்ற வலி, கடும் உடல் சோர்வு ஆகியவை உள்ளன. எவ்வளவுதான் சாப்பி

எஸ். சுவாமிநாதன்

கடந்த சில வருடங்களுக்கு முன் எனக்குக் கடுமையான அம்மை நோய் கண்டது. அதற்குப் பின் மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம். மார்பை இறுக்கிப் பிடிப்பது போன்ற வலி, கடும் உடல் சோர்வு ஆகியவை உள்ளன. எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் தேறவில்லை. இந்த உபாதைகள் தீர என்ன வழி?

 ஒரு வாசகர்,  ப.குமாரபாளையம்,  நாமக்கல் மாவட்டம்.

சுருங்கி விரியும் இயல்புடைய மூச்சுக் குழாய்ப் பகுதி, தன் தன்மையைச் சற்று இழந்து இருக்கக் கூடிய நிலையில் நீங்கள் குறிப்பிடுவதுபோல, மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் நேரலாம். இது அம்மை நோயின் தாக்கத்தினால் நிகழ்ந்திருக்கக் கூடும். இதனால் உங்களால் குறுகிய அளவில்தான் சுவாசிக்க முடியும். அந்த மூச்சில் ஆழமும் கிடையாது. நீளமும் கிடையாது. அதாவது மூச்சுவிடும் நேர அளவிலும் விரிவு கிடையாது. மூச்சு இழுக்கும் வேகத்திலும் அழுத்தமில்லை. மார்பு கொள்ளுமளவில் அதிக அளவில் மூச்சை உள்ளிழுப்பதும், அதை அவ்வளவிலேயே வெளியேற்றுவதும் முடியாத நிலையில்,. உங்களுக்குப் பிராண சக்தியே கிடைக்காமற் போய்விடுகிறது.

 குளிர், வெயில், பனி, மழை, காற்று என்ற பருவகால நிலை மாறுதல்களைப் பேதமின்றி தாங்கக் கூடிய சகிப்புத்தன்மை, எத்தனை நெருக்கடி இருந்தாலும் தான் செய்ய வேண்டிய பணிகளை முறைப்படி சுறுசுறுப்புடன் செய்ய ஊக்குவிக்கும் உற்சாகம், நோய்களுக்கு எளிதில் வசப்படாமல், நோய் எளிதில் குணமாகக் கூடிய எதிர்ப்பு சக்தி, சுக துக்கங்களைத் தாங்கி அதனால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளில் நெகிழ்ச்சியோ கலக்கமோ பெறாதிருக்கும் மனோதிடம், சிந்தனைத் தெளிவு இவற்றுக்குத்தான் பிராண சக்தி என்ற மாற்றுப் பெயர். இந்தப் பிராண சக்தியை நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவாலோ, சுகத்திற்காக ஏற்படுத்திக் கொண்டுள்ள சாதனங்களாலோ சம்பாதிக்க முடியாது. சுவாசப் பயிற்சி ஒன்றால் மட்டுமே கிடைக்கக் கூடியது. அதற்கு நீங்கள்,

 * எந்த வேலையை ஆரம்பித்தாலும் அதற்கு முன் சற்று வேகமாக மூச்சை வெளியிட்டு ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுக்கலாம். கனமான சாமானை தூக்கும்போதோ, படிகள் வழியே மேலே ஏறும்போதோ இதை முக்கியமாகச் செய்ய வேண்டும். முதல் இரண்டு படிகள் ஏறும்போது மூச்சை உள்ளிழுத்து, அடுத்த இரண்டு படிகள் ஏறும்போது மூச்சை வெளியே விடவும். இப்படி மாற்றி மாற்றிச் செய்து கொண்டே ஏறினால், மாடி ஏறிய பிறகு மூச்சுக்காகத் திணற வேண்யிருக்காது. ஒரே சீராக ஆனால் சுறுசுறுப்புடன் முழு மூச்சாக உள்ளிழுத்து விடுவதால் பிராண சக்தி உடலில் நிறையச் சேர்கிறது. உடலில் உற்சாகம் குறைவதில்லை. களைப்பும் ஏற்படுவதில்லை. இதுதான் இப் பயிற்சியால் ஏற்படும் லாபம்.

 * எவ்வளவுதான் நன்றாகச் சாப்பிட்டாலும் உடல் தேறவில்லை என்றால், குடலின் வழியாகச் செல்லக் கூடிய உணவின் சாராம்சமான பாதையில், வழி நெடுக, குழாயின் உட்புறச் சுவரில் வேண்டத் தகாத படிவங்கள் சூழ்ந்து நிற்பதையே காட்டுகிறது. அவை கறைவதற்கு வில்வாதி லேஹியம் எனும் ஆயுர்வேத மருந்து உங்களுக்கு உதவிடக் கூடும். ஒரு கொட்டைப் பாக்களவு இந்த லேகிய மருந்தை தினம் காலை இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிட நல்லது. நல்ல பசியிருந்தும் ஜீரணமாகாதிருத்தல், அடிவயிறு கனத்து வாயு தங்கியிருத்தல், உணவைக் கண்டால் வெறுப்பு, ஜீரண சக்தி குறைவால் அடிக்கடி பெருமூச்சு விடுதல், ஜீரணமாகாததால் உடலில் ரத்தக் குறைவு ஏற்படுதல் போன்ற உபாதைகள் இந்த வில்வாதி லேகியத்தைச் சாப்பிட்டு வந்தால், குணமாகிவிடும்.

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT