தினமணி கதிர்

பெரியவன் ஆகும் வழி?

சுவாமி ராமதீர்த்தர் கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவர் மாணவர்களுக்கு ஒருநாள் கற்பித்துக் கொண்டிருக்கையில் கரும் பலகையில் ஒரு கோடு வரைந்தார். பின்னர் ஒரு மாணவனை அழைத்து, ""இக்கோட்டைச் ச

ஆர். ஜெயலட்சுமி

சுவாமி ராமதீர்த்தர் கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவர் மாணவர்களுக்கு ஒருநாள் கற்பித்துக் கொண்டிருக்கையில் கரும் பலகையில் ஒரு கோடு வரைந்தார். பின்னர் ஒரு மாணவனை அழைத்து, ""இக்கோட்டைச் சிறியதாக்கு'' என்று கூறினார்.

அம்மாணவன் வேகமாக வந்து கரும்பலகையின் பக்கம் போய் அவர் வரைந்திருந்த கோட்டின் நீளத்தை அழிக்க முனைந்தான்.

அதைக் கண்ட சுவாமிகள்,""மாணவனே நில். நான் கோட்டைச் சிறிதுபடுத்தச் சொன்னேனே தவிர, அதை அழிக்கச் சொல்லவில்லையே'' என்றார்.

கோட்டை அழிக்கவும் கூடாது, அதைச் சிறிதாக்கவும் வேண்டும். இதை எப்படிச் செய்வது?

மாணவர்கள் ஒன்றும் புரியாது திகைத்துக் கொண்டிருந்தார்கள். இந்நேரம் மற்றொரு மாணவன் கரும்பலகையின் பக்கம் வந்து அதில் வரைந்திருந்த கோட்டின் அருகில் அதைவிடவும் நீளமான இன்னொரு கோட்டை வரைந்தான்.

இம்மாணவனின் செயல் சுவாமிகளுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. இம்மாணவனின் அறிவுக்கூர்மையை அவர் தமக்குள் வியந்து கொண்டார்.

அவர் ஏனைய மாணவர்களைப் பார்த்து, ""இதோ பாருங்கள். இந்தக் கோடு நமக்கு என்ன அறிவிக்கின்றது? வாழ்க்கையில் ஒருவன் பெரியவன் ஆக விரும்பினால் அவன் மற்றவர்களை மறைக்கவோ, அழிக்கவோ நினைக்கக் கூடாது என்பதைத்தான் இது சொல்கிறது. பெரியவன் ஆக விரும்புகிறவன், பெரிய வேலைகளைச் செய்தே அந்நிலையை அடைய வேண்டும்'' என்று விளக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT