முகப்பு
தினமணி கதிர்

புள்ளிகள்...

நடிகை இஷா தியோல் ஹேமமாலியின் மகள். இவர் தனது சிறுவயது நண்பரான பாரத் தஹ்டானியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:36 AM
பகிர்:

நடிகை இஷா தியோல் ஹேமமாலியின் மகள். இவர் தனது சிறுவயது நண்பரான பாரத் தஹ்டானியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ""இருவரும் சிறு வயதில் வேறு வேறு பள்ளியில் படித்தோம். ஆனாலும் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் போட்டிகளில் சந்தித்துக் கொள்வோம். ஆண்டுகள் கடக்க கடக்க எங்கள் நட்பு காதலாக மாறியது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, பெற்றோரால் அல்ல என்பதை நம்புகிறவன் நான். இஷா என் அம்மாவை சிரத்தை எடுத்து கவனித்துக்கொள்கிறாள். மாமியாருக்கும் மருமகளுக்கும் "கெமிஸ்ட்ரி' நன்றாக இருக்கிறது. எதைச் செய்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்பது அவளுக்குத் தெரியும். எனக்குப் பிடித்தவற்றை தேடித் தேடி செய்கிறாள்.

மனைவி என்பவள் இரவில் பின் தூங்கி காலையில் கணவன் எழுவதற்கு முன்பே எழுந்திருக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும். இஷா இந்த விதிப்படி நடந்து மாமியாருக்கு கூடமாட உதவி செய்கிறாள். ஆனாலும் நடனப் பயிற்சியை கைவிடக்கூடாது என்று அவளின் அம்மா அட்வைûஸ அள்ளித் தெளிக்கிறார். எல்லாம் நல்லபடியே போய்க்கொண்டிருக்கிறது'' என்கிறார் பாரத் தஹ்டானி.

""40 ஆண்டுகளுக்கு முன்பு நான் பொறியாளராக வேலை பார்க்க ஆரம்பித்த காலத்தில் பெண்கள், வங்கி, தபால் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே வேலை பார்த்து வந்தனர். நான் ஒருத்திதான் முதன்முதலாக பொறியியல் பயின்று வேலைக்குச் சென்றேன். ஆயிரக்கணக்கான ஆண்களுடன் நானும் அவர்களைப் போலவே சீருடை அணிந்து வேலை செய்வதை எல்லோரும் வித்தியாசமாகப் பார்த்தனர். அந்தச் சமயம் நான் சிறிது அசெüகரியமாக உணர்ந்தேன். அதன் பின்புதான் நான் எதுவும் தவறு செய்யவில்லை. பின் எதற்காக நான் வருந்தவேண்டும் என்று நினைத்தேன். அந்த நினைப்பு என்னுள் வந்தவுடன் எனக்குத் துணிவு பிறந்தது. அதன் பின்பு என்னுடைய வெற்றிகளுக்கு எதுவும் தடையாயிருக்கவில்லை''என்கிறார் சுதா மூர்த்தி. இவர் சமூக ஆர்வலர், எழுத்தாளர் மட்டுமல்ல, இன்ஃபோஸிஸ் அறக்கட்டளையின் நிறுவனரும்கூட!

பாலிவுட்டின் "ஃபிட்'டான நடிகைகளில் முன்னணி வகிப்பவர் பிபாஷா பாசு: ""உடற்பயிற்சியினால் மட்டுமே உடலை கட்டுறுதியாக வைத்துக் கொள்ள முடியும் என்பதை 100 சதவீதம் உணர்ந்தவள் நான். எவ்வளவு பிஸியான சூட்டிங்காக இருந்தாலும் உடற்பயிற்சியை தவிர்க்கவே மாட்டேன். அண்மையில் பன்றிக் காய்ச்சல், கீல்வாதம்

ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். அப்போதுதான் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டேன். தினம் ஒரே வகையான உடற்பயிற்சிகளை செய்ய மாட்டேன். உடற்பயிற்சி, கார்டியோ, வயிற்றுக்கான உடற்பயிற்சி, நடனப் பயிற்சி என மாறி மாறி பயிற்சி மேற்கொள்வேன்'' என்கிறார்.

பிரபலங்களின் "விவாகரத்து வழக்கறிஞர்' என்று புகழின் உச்சியில் இருப்பவர் வழக்கறிஞர் மிருணாளினி தேஷ்முக். பாலிவுட் நடிகர் அமீர்கான், தொழிலதிபர் அருண் நாயர் உள்ளிட்டப் பல பிரபலங்களுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்தவர் இவர். ""பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம்தான் சிறந்தது. ஆயுசு முழுவதும் இருவரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் அமைகிறது. பெற்றோர் ஆணும் பெண்ணும் கவர்ச்சியாக இருக்கிறார்களா என்று பார்ப்பதில்லை; அவர்களின் குணநலன்களையே பார்க்கிறார்கள். நானும் என் கணவர் டாக்டர் விஜய் தேஷ்முக்கும் ஒரே பின்னணியில் இருந்து வந்தவர்கள். முப்பது ஆண்டுகளாக நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்'' என்கிறார் அவர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி என்ன காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் தன் முத்திரையைப் பதிப்பதில் உறுதியாக இருக்கிறார்.

அண்மையில் தில்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாசார மையத்தில் நடந்தது அவரின் கதக் நடன நிகழ்ச்சி. நிகழ்ச்சிக்கு வந்திருந்த

அனைவரும் "ஓஹோ'வென அவரைப் பாராட்டினர். அதே போன்று பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ரீது குமார் நடத்திய ஃபேஷன் ஷோவிலும் கலந்து கொண்டு "ரேம்ப்- வாக்' செய்திருக்கிறார் ஷர்மிஸ்தா முகர்ஜி. பங்கேற்ற தொழில்முறை மாடல்களைக் காட்டிலும் ஃபேஷன் ஷோவில் அசத்தியவர் ஷர்மிஸ்தாதானாம்!

மகாராஷ்டிர நவநிர்மன் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரே, கோலாபூர் நகரத்திற்கு அண்மையில் சென்றிருந்தார். அவரைச் சந்திக்க விரும்பிய கட்சியின் விசுவாசி ஒருவர் அப்பகுதியில் பிரபலமான காலணிகளை ராஜ் தாக்ரேவுக்கு அன்பளிப்பாக அளிக்க எண்ணினார். ஒரு ஜோடி காலணியை, அன்பளிப்பு போன்று வண்ண நிற பேப்பர்கள் சுற்றி அதை அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு எடுத்துச் சென்றார். மூத்த தலைவர் ஒருவர் அந்த விசுவாசியை தடுத்து நிறுத்தி, கைகளில் உள்ள அன்பளிப்பு குறித்து விசாரித்தார். ""நமது கலாசாரத்தின்படி காலணிகளை பரிசளிப்பது அழகல்ல'' என்று கூறி அந்த விசுவாசியைத் திருப்பி அனுப்பிவிட்டாராம்.

திரைப்படக் கல்லூரியில் ஆசிரியராக இருந்து ராஜ்குமார் ஹிரானி, கிரீஷ் காசரவள்ளி ஆகியோரை திரைப்பட உலகுக்கு அளித்த பெருமைக்குரியவர், தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் தலைவராக இருந்த பி.கே. நாயர். இந்திய திரைப்படத்துறையின் நூற்றாண்டையொட்டி,  திரைப்படத்துறையில் அவரின் பங்களிப்பை விளக்கும் ஆவணப்படத்தை "செல்லுலாய்ட் மேன்' என்னும் பெயரில் உருவாக்கியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் ஷிவேந்திர சிங் துங்கார்புர். ஜெயா பச்சன், நஸிருதீன் ஷா ஆகியோருடன் நம்மூர் பிரபலம் கமல்ஹாசனும் இந்த ஆவணப்படத்தில் நடித்திருக்கிறாராம்!

ஜ்வாலா கட்டா - இரட்டையர் பேட்மின்ட்டனுக்கு புத்துணர்ச்சியை அளித்துக் கொண்டிருக்கும் வீராங்கனை. தெலுங்கு திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ள இவரிடம் ""நடிப்பு அனுபவம் எப்படி இருக்கிறது?'' என்று கேட்டதற்கு, ""விளையாட்டே பரவாயில்லை; திரையுலகம் நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக சிரமப்படவேண்டியிருக்கிறது...'' என்கிறார் செல்ல அலுப்புடன் ஜ்வாலா கட்டா.

சேதன் ஒரு பி.காம் பட்டதாரி. கர்நாடக  மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தகப்பனார் ஒரு விவசாயி; ஆறு குழந்தைகள். சேதன் தான் முதன்முதலில் அவர் குடும்பத்தில் கல்லூரி வாசலை மிதித்தவர். பி.காம் பட்டதாரி ஆனபின் அவர் மேற்கொண்டு சி.ஏ. படிக்க விரும்பினார். ஆனால் அதற்கு பணம் இல்லை. உடனே "அம்மாவின் வார்த்தை' என்ற கன்னட நாவலை எழுதினார். அதை பதிப்பிக்க ஒரு பதிப்பாளரைத் தேடினார். யாரும் கிடைக்கவில்லை. பிறகு பெங்களூர் வந்தார். அங்கு ஒரு பதிப்பாளரிடம் கெஞ்சி கூத்தாடிய பிறகு அவர் அந்த நாவலை பிரசுரிக்க ஒப்புக் கொண்டார். 25,000 ரூபாய் செலவில் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டன. நாவலை விற்க வேண்டுமே! சேதன் அதற்கு ஒரு வழியைக் கையாண்டார். தானே விற்பனையாளராக மாறினார். ஒவ்வொரு கல்லூரியாகப் போனார். கல்லூரி வாயிலில் ஒரு சின்ன பேனரை தொங்கவிட்டார். அதில் அவருடைய சி.ஏ. கனவு, குடும்ப சூழ்நிலை எல்லாம் எழுதப்பட்டிருந்தன. நாவல் மாணவர்களுக்கு 40 ரூபாய், மற்றவர்களுக்கு 80 ரூபாய் என்று விற்கப்படுகிறது.

அனிதா ராமச்சந்திரன்.

பிரமிள் என்னும் புனைப் பெயரில் பிரபல கவிஞராக விளங்கியவர் தருமு சிவராமன். அவரின் 74-ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவரின் இலக்கியப் பங்களிப்புகளைக் கொண்ட ஃபேஸ்புக்கை இணையத்தில் தொடங்கியிருக்கின்றனர் அவரின் ரசிகர்கள்.

பரதநாட்டியக் கலைஞர் தனஞ்செயன் முன்னணி நாளிதழ்கள் பலவற்றுக்கும் ஆசிரியருக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்.  

ஜெனி, திரு.

திருஅவையின் 266-வது திருத்தந்தை (போப்பாண்டவர்) பிரான்சிஸ். பேருந்தில் பயணம் செய்யவே விரும்புவார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நுரையீரலுடன் வாழ்ந்து வருகிறார். நோய் காரணமாக இளம் வயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்டது. போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்படும் வரை தம் உணவைத் தாமே சமைத்துக் கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சிறிய அறையில் மாற்றுத்திறனாளியான ஓர் இயேசு சபைத் துறவியுடன் வாழ்ந்து வந்தவர்.

தங்க.சங்கரபாண்டியன்

சுசீலா ராமன் - இதுவரை 5 இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். இங்கிலாந்தின் "மெர்க்குரி மியூசிக் பிரைஸ்', பிபிசி ரேடியா 3 இன் "நியூ கம்மர் அவார்ட்' போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.  பிபிசி மியூசிக் அவார்ட் அவருக்கு மீண்டும்  கிடைத்தபோது, அவரைப் பற்றி ஒரு மணி நேரம் ஒடக் கூடிய குறும்படம் ஃபிரெஞ்ச்- ஜெர்மன் டிவி சேனலான அதபஉயில் ஒளிபரப்பானது.

லாகூரில் உள்ள இசையமைப்பாளர்களுடன், ராஜஸ்தானி இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பக்தி இசையிலும் மூழ்கியிருக்கிறார். இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? சுசீலா ராமன் வசிப்பது லண்டனில்.

அவருடைய பெற்றோர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள். சுசீலா ராமனுக்கு நான்கு வயதாக இருக்கும்போதே அவர்கள் முதலில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர். பின்னர் பிரிட்டனில் செட்டிலாகிவிட்டார்கள்.

பெரிய நகரங்களில் ஓவியக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. பார்க்க வருபவர்களில் பலர், சும்மா பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள்.  ஒரு சிலர் மட்டுமே ஓவியங்களை விலை கொடுத்து வாங்கிச் செல்வார்கள். ஓவியக் கண்காட்சிகள் நடத்தும் செலவே பல நேரங்களில் கையைக் கடித்துவிடும்.

இப்படியெல்லாம் பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தி அனுபவம் பெற்ற மும்பையைச் சேர்ந்த  துருவா காந்தி என்ற இளம் பெண், கொஞ்சம் மாற்றி யோசித்தார்.  பிறந்தது  www.breathearts.com.

உலகம் முழுவதும் உள்ள பல வகைப்பட்ட ஓவியங்கள் இந்த ஆன்லைன் கண்காட்சியில் அணிவகுக்கின்றன. ஒரு மாதத்தில் 600 இலிருந்து 800 பேர் வரை இதைப் பார்க்கிறார்கள்.  ரூ.5000 இலிருந்து 25 லட்சம் வரை கொடுத்து ஓவியங்களை வாங்கவும் செய்கிறார்கள். ஆன் லைனில் வாங்க விருப்பம் தெரிவித்தால் ஓவியங்கள் கப்பலிலோ, விமானத்திலோ அனுப்பி வைக்கப்படுகின்றன. இதோடு மட்டும் நின்றுவிடவில்லை துருவா காந்தி. "Secrets of the Art Millionaires' என்ற புத்தகத்தை சமீபத்தில் அவர் எழுதியிருக்கிறார்.

MILLS & BOON - என்ற பிரிட்டிஷ் பதிப்பகம் ஒன்று உள்ளது. இந்தப் பதிப்பகம், உலகம் முழுவதும் கடும் கண்டனங்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் உள்ளான ஒன்று. நிறைய ரொமான்ஸ்கள் வழியும் புத்தகங்களை வெளியிட்டதுதான் காரணம். பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை "மில்ஸ் & பூன்' கதையெழுதுபவராக இந்தப் பதிப்பகம் அடையாளம் காட்டியது. அவர் மிலான் வோரா.

பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற மிலான் வோரா, கல்லூரி காலத்தில் ஆங்கில இலக்கிய வகுப்புகளில் தூங்கி வழிந்தவர். பின்பு, விளம்பர நிறுவனங்களில் வேலை. 2009 இல் அவர் எழுதிய "தி லவ் ஆசனா' கதையே  "மில்ஸ் & பூன்' கதையாளராக அவரை அடையாளம் காட்டியது.  தற்போதைய அவருடைய பரபரப்பான படைப்பு “பஐஇஓ-பஞஇஓ ரஉ’ழ்ங் 30’.

இப்படியெல்லாம் எழுதுகிறீர்களே என்று கேட்டால், ""இந்தியாவில் என்னுடைய வாசகர்கள் யார் தெரியுமா? நடுத்தர வர்க்கப் பெண்கள்தாம்'' என்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →