முகப்பு
தினமணி கதிர்

சாக்ரட்டீஸ் பயன்படுத்திய யுக்தி!

சாக்ரட்டீஸ் காலையிலும் மாலையிலும் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் ஏதென்ஸ் நகரத்தின் கடைத்தெரு, சாலைகள் என மக்கள் கூடும் இடத்திற்குச் செல்வார்

Updated On : 13 ஜூன், 2016 at 11:31 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:59 PM

சாக்ரட்டீஸ் காலையிலும் மாலையிலும் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் ஏதென்ஸ் நகரத்தின் கடைத்தெரு, சாலைகள் என மக்கள் கூடும் இடத்திற்குச் செல்வார். அவர்கள் கவனம் கவர்ந்து அவர்களிடம் பேச்சு மூலம் தன் சிந்தனையை வெளிப்படுத்துவார்.

பகல் பொழுதில் கையில் விளக்கோடு செல்வார். கூட்டம் உள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவது போல கையில் விளக்குடன் தேடுவார். நடிப்பார். வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடும். "என்ன தேடுகிறீர்கள்?' என யாராவது கேட்பார்கள். "மனிதர்களைத் தேடுகிறேன்' என்பார் சாக்ரட்டீஸ். மக்கள் புரியாது விழிக்க அவர்களிடம் பேசுவார். தன் கருத்துக்களை தெளிப்பார். இவர் பயன்படுத்திய யுக்திகளில் இதுவும் ஒன்று.

சாக்ரட்டீஸ் தெளிந்த கருத்துக்களில் சில:

Advertisement

"நல்ல குணங்களை ஞானம் என்பேன். நாம் எதை இழந்தாலும் கௌரவத்தை இழக்க இடம் தரக்கூடாது'. இதுவும் இவரின் தத்துவ  முத்து.

"நட்பைப் பெறுவதில் நிதானமாக இரு. நட்பைப் பெற்ற பின் உறுதியுடன் நீடித்து நட்பைக் காப்பாற்று'.

(பெரியோர் வாழ்வில் சுவையானவை' என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.