முகப்பு
தினமணி கதிர்

மருதமலை முருகனும் எம்.ஜி.ஆரும்!

தேவர் பிலிம்ஸ் அலுவலகம் முதல் மாடியிலுள்ள சின்னப்ப தேவரின் தனி அறை. மருதமலை முருகன் படம் தலைக்கு மேல் காட்சி தர, தேவர் பளிச்சிடும் திருநீறு குங்குமம் துலங்க தன்முன் அமர்ந்திருந்த வெளியூர்ப் பிரமுகர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

பகிர்:

தேவர் பிலிம்ஸ் அலுவலகம் முதல் மாடியிலுள்ள சின்னப்ப தேவரின் தனி அறை. மருதமலை முருகன் படம் தலைக்கு மேல் காட்சி தர, தேவர் பளிச்சிடும் திருநீறு குங்குமம் துலங்க தன்முன் அமர்ந்திருந்த வெளியூர்ப் பிரமுகர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அக்காலத்திய " பொம்மை' இதழின் உதவியாசிரியர் அவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்டு கொண்டிருந்தார்.

""இப்போ நான் சொல்றசேதி உங்களுக்கெல்லாம் பிரமிப்பாக இருக்கும் நம்பக் கூட மாட்டீங்க... இது நிஜமான சமாசாரம். எம்.ஜி. ஆருக்குத் தெய்வபக்தி இல்லேன்னு ரொம்ப பேர் சொல்றாங்க என் எதிரே யாரும் சொல்லலே... அவருக்குக் கடவுள்பக்தி உண்டு. நான் எப்போ மருதமலைக்குப் போனாலும் எம்.ஜி.ஆர். பெயருக்கு அர்ச்சனை பண்ணுவேன். அந்தப் பிரசாதத்தைக் கொடுக்கும் போது உட்கார்ந்திருந்தால் கூட எழுந்து பய பக்தியோடு எம்.ஜி.ஆர் வாங்கிக் கொள்வார். ஒருநாள் நாள் மருதமலை போய்விட்டு வந்தேன் என்று அவரிடம் சொன்னேன். வழக்கம்போல பிரசாதம் எங்கே? என்று கேட்டார். சோதனையாக அன்று எடுத்துக் கொண்டு போக மறந்துவிட்டேன்''.

""அன்று முழுவதும் எம்.ஜி.ஆர் என்னுடன் பேசவே இல்லை'' என்று தன்னை சந்திக்க வந்தவர்களிடம் தேவர் பேசி முடித்தார்.

Advertisement

"திரைக்குப் பின்னால்' என்ற நூலிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.