என்.எல்.சி இந்தியா 4வது காலாண்டு லாபம் ரூ. 1,393 கோடியாக உயர்வு!
என்.எல்.சி இந்தியா லிமிடெட், மார்ச் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஏறக்குறைய மூன்று மடங்காக உயர்ந்து ரூ. 1,393.46 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
புதுதில்லி: என்.எல்.சி இந்தியா லிமிடெட், மார்ச் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஏறக்குறைய மூன்று மடங்காக உயர்ந்து ரூ. 1,393.46 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனம் ரூ. 481.96 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்தது.
நிறுவனத்தின் மொத்த வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 3,971.90 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 5,197.22 கோடியாக இருப்பதாக என்.எல்.சி இந்தியா தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
நிறுவனத்தின் மொத்தச் செலவு, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 3,880.46 கோடியிலிருந்து அதிகரித்து ரூ. 4,327.14 கோடியாக உயர்ந்துள்ளது.
2025-26 நிதியாண்டிற்கான 2.50 சதவீத இறுதி ஈவுத்தொகையை, இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை மற்றும் வரவிருக்கும் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
NLC India Ltd (NLCIL) on Wednesday reported almost a threefold rise in consolidated net profit at Rs 1,393.46 crore for the March quarter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.