FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

அர்விந்த் ஸ்மார்ட்ஸ்பேசஸ் முதல் காலாண்டு லாபம் 8 மடங்கு உயர்வு!

அர்விந்த் ஸ்மார்ட்ஸ்பேசஸ் லிமிடெட், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8 மடங்கு அதிகரித்து ரூ. 97.39 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 7:08 pm IST
பகிர்:

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான அர்விந்த் ஸ்மார்ட்ஸ்பேசஸ் லிமிடெட், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8 மடங்கு அதிகரித்து ரூ. 97.39 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 11.96 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 106.39 கோடியாக இருந்த மொத்த வருவாய், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 322.02 கோடியாக உயர்ந்துள்ளது.

செயல்பாட்டுத் திறனைப் பொறுத்தவரை, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 175 கோடியாக இருந்த விற்பனை முன்பதிவுகள், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் இது ரூ. 432 கோடியாக உயர்ந்துள்ளது. இது இரண்டு மடங்கிற்கும் அதிகமான வளர்ச்சியாகும் என்றது நிறுவனம்.

Advertisement

Advertisement

அர்விந்த் ஸ்மார்ட்ஸ்பேசஸ் அகமதாபாத், காந்திநகர், பரோடா, பெங்களூரு, மும்பை பெருநகரப் பகுதி மற்றும் புனே ஆகிய இடங்களில் ரியல் எஸ்டேட் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

summary

Realty firm Arvind SmartSpaces Ltd reported an eight-fold increase in its consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments