முகப்பு
தினமணி கதிர்

கலைவாணரின் வாழ்வில்...

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்தில் விழா. முக்கியமாக எம்.கே. தியாகராஜ பாகவதரைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.

Updated On : 13 மே, 2016 at 7:41 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:46 PM

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்தில் விழா. முக்கியமாக எம்.கே. தியாகராஜ பாகவதரைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.

""கலைவாணருக்கும், பாகவதருக்கும் ஏதோ மனக்கசப்பு போலிருக்கு, அதுதான் அவர் வரவில்லை''.

அங்கிருந்தவர்கள் இப்படி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

Advertisement

ஆனால், மாலை நேரத்தில் விழாவுக்கு வந்தார் பாகவதர். என்.எஸ்.கே. அன்போடு அவரை வரவேற்றார். புகைப்படக் கலைஞர்கள் ஓடி வந்து படமெடுத்தனர். அப்போது கலைவாணர் தம் துணைவியார் மதுரத்தை அழைத்தார். பாகவதரையும் அழைத்தார். அவர்கள் இருவருக்கும் இடையில் தாம் நின்று கொண்டார். மூவரும் ஒன்றாக நின்றதும் விழாவுக்கு வந்த அனைவருக்கும் சந்தோஷம்.

பின்னர் எல்லோரையும் பார்த்து, ""எங்களுக்குள் இருக்கும் நட்பை இப்போது பார்த்தீர்களா? எங்கள் அன்பை யாராலும் பிரிக்க இயலாது. எங்களுக்குள் எம்.கே.டி. இருக்கிறார். எம்.கே.டி.யில் நாங்கள் இருக்கிறோம்'' என்றார்.

யாருக்கும் புரியவில்லை. ""ஆம், இதோ என் மனைவி மதுரம் எம்; அடுத்து நான் கே. அடுத்து தியாகராஜ பாகவதர் டி. அதாவது எம்.கே.டி. இப்போது புரிகிறதா எங்கள் அன்பு?''

இப்படி கலைவாணர் சொன்னதும் கைதட்டலில் மண்டபமே அதிர்ந்தது.

முக்களுக்குச் சிரிப்பூட்டுவது இந்தக் காலத்திலே மிக கஷ்டமான காரியம் என்பதை நான் நன்றாக, அனுபவப்பூர்வமாக அறிந்துகொண்டேன். முதலிலே நான் திரைப்பட உலகில் பிரவேசித்தபோது, இந்தக் காரியம் ரொம்பவும் எளிதாக நடைபெற்று வந்தது.

""தட்சயக்ஞம்'' என்ற படத்தில் "நான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். நீ பேசாம நின்றுகிட்டேயிருந்தால் என்ன அர்த்தம்?' என்று சொன்னேன். இதற்கு ஒரு சிரிப்பு.

ஆர்யமாலாவில் ""ஐயோடா...'' என்றும் ""சேட்டன் கிளியாயில்லே...'' என்றும் சொன்னேன். இதற்கு ஒரு கைதட்டல்.

அசோக்குமார் படத்தில், "இவரு சொன்னா சொன்னதுதான் எவரு இவருதான்...'' இவ்வளவுதான் ஒரே ஆமோதிப்பு. சகுந்தலாவில், ""காலையிலே எழுந்திருச்சு... கஞ்சித்தண்ணியில்லாமக் கஷ்டப்படறேன் கடவுளே... கொஞ்சம் கண் திறந்து பாரு கடவுளே...'' என்ற பாட்டைக் கேட்டதும், ஒரே குதூகலம்.

பவளக்கொடியில், ""பரமசிவனாக்கி பார்வதி கங்கா தோ பத்தினி வேறே... எனக்கு ஒண்ணும் நஹிஹே...'' இதற்கும் ஒரே குதூகலம். கைதட்டல், சிரிப்பு எல்லாம்.

இதெல்லாம் கடந்த கால ""ஹாஸ்யத் துணுக்குகள்'' இப்போ இவ்வளவு ஹாஸ்யங்களையும் வேறொருவர் ஒன்றாக இணைத்துக் கட்டி, உங்கள் முன்னே வைத்தால்கூட, சிரிக்க மாட்டீர்கள். காரணம், உங்கள் அறிவின் முதிர்ச்சியும், சிந்தனையின் பெருக்கமும்தான். இப்போது மக்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து, மகிழ வேண்டுமானால், அந்தப் பணியைச் செய்யும் கலைஞருக்குப்

பல துறைகளிலும் தேர்ச்சியும், தெளிந்த அறிவும் வேண்டும்''.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வானொலி உரை (1949)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.