முகப்பு
தினமணி கதிர்

சிரி...  சிரி... 

 ""இதை அமைதிப் பூங்கான்னு ஏன் சொல்றாங்க?''""மொபைல் போனை சைலன்ட் மோடில் வைக்கவும்னு போர்டு வச்சிருக்காங்க. அதான்''

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
பகிர்:

 ""இதை அமைதிப் பூங்கான்னு ஏன் சொல்றாங்க?''
""மொபைல் போனை சைலன்ட் மோடில் வைக்கவும்னு போர்டு வச்சிருக்காங்க. அதான்''

 - அப்ரோஸ் பானு, 
சென்னை. 

"" வாழ்க்கைன்னா கூட்டல்  கழித்தல் இருக்கத்தான் செய்யும். நாம் தான் அதை சரியாக வகுக்கணும்''
""இதுக்காக  நான் கணக்கு வேற  கத்துக்கணுமா?''

""குப்பையில் கிடந்த மாணிக்கத்தை...''
""என்ன செய்தே?''
""தூக்கி எடுத்து  அவனோட  வீட்ல விட்டுட்டு வந்தேன்''

- ஏ. நாகராஜன், 
பம்மல்.


அவர்: உங்க மனைவி எப்போதும் புன்சிரிப்போடு இருக்கிறாரே? 
இவர்: என் மணி பர்ஸ், ஏடிஎம் கார்டு எல்லாம் அவள் வசம்தான் இருக்கு! 

-கு.அருணாசலம், 
தென்காசி. 


""டைரக்டர் நாகராஜாவுக்கு அவுங்க அப்பா, அம்மா தீர்க்கதரிசி மாதிரி பேர் வச்சிருக்காங்க!''
""எப்படிச் சொல்றீங்க?''
""அவர்  படம் எடுத்தா   எல்லாருமே  பார்க்கவே நடுங்குறாங்களே''



"" எதுக்கு நரியோட முகம் உள்ள மாஸ்க்கை நாய்க்கு மாட்டி வச்சிருக்கீங்க ?''
""தினமும் நரி முகத்துல முழிச்சா நல்லது'ன்னு சொன்னாங்க... அதான் !''

-வி. ரேவதி,
தஞ்சை.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.