தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளமையாக தோன்ற என்ன வழி!

வாழ்வை அமைதியாக  நிதானமாக  அமைத்துக் கொள்ள இன்றுள்ள  சூழ்நிலை  உதவவில்லை  ரயிலும்  காரும்  கடிகாரமும்

தினமணி

என் வயது 51  ஆனால்  தோற்றத்தில்  60-65  வயது உள்ளவனைப்  போலத் தென்படுகிறேன்  கல்லூரி  நண்பர்களின்  ஒரு  கெட்டு டூ கெதர்  பார்ட்டியில்  மற்றவர்களை விட நானே வயதில்  மூத்தவனைப்  போல இருந்ததால்  மிகவும் கேலி  கிண்டல் செய்தனர்.  எனக்கு  வருத்தமாக  உள்ளது.  இது எதனால்? நான் இளமையுடன்  இருக்கவும்  ஆரோக்கியத்துடன்  இருக்கவும்  வழி என்ன?

வாழ்வை அமைதியாக  நிதானமாக  அமைத்துக் கொள்ள இன்றுள்ள  சூழ்நிலை  உதவவில்லை  ரயிலும்  காரும்  கடிகாரமும்  உடலைப்  பரபரப்புமிக்க  சூழ்நிலையில்  விரட்டி  அடிக்கின்றன.  அமைதியற்ற  ஒலி-ஒளி  மிக்க சூழ்நிலை  கண்,காது முதலிய  புலன்களை  அயற்வுறச் செய்கின்றன.  அதனால்  நீங்கள்  விரும்பினாலும்  முயன்றாலும்  வாழ்வில்  அமைதி கிடைக்குமா  என்பது  சந்தேகமாக  உள்ளது.  அதனால்  ஆண்டுக்கு  ஒரு வயது என்ற நிலைமாறி  ஆண்டுக்கு  இரண்டு  வயது  தோற்றத்தில்  கூடி விடுகின்றது.

உடல் தளர்ச்சி  அடைவதைக் குறிப்பவை நரையும்  திரையும்,  கேசங்கள்  வெளுப்பதும்  மேல்தோல்  சுருக்கமடைந்து  ஒளி  மங்குவதும்  மூப்பின்  முன்குறி.  ரத்தக்  கொதிப்பு,  நீரிழிவு இதயநோய் போன்றவை  மனதில்  எழும் கோப -  தாபங்களின்  வழியாகவும்,  காரசாரமான  உணவுகளை  ஓட்டல்களிலிருந்து  அடிக்கடி  வாங்கி சாப்பிடுவதாலும் ஏற்படுகின்றன.
 
உங்களை  மறுபடியும்  இளைஞனாக முடியாவிட்டாலும்  வயது கிடுகிடு வென ஏறாமலிருக்கக்கூடிய  சில வழிகளில்  மன உணர்ச்சிகளில்  கோபம்,  சோகம், பயம்,  தாபம்,  கவலை  போன்றவை  உடற்சூட்டை  அதிகப்படுத்தி,  தலைமுடிக்கு  ஆதாரமாக  உள்ள  தோலில்  இந்தத் தாபம்  அதிகமாவதால்  முடியின்  வேர்ப்பகுதிகளில்  அழற்ச்சியை  ஏற்படுத்தி, முடி  நரைத்து விடுகிறது.  அதனால்  நீங்கள்  இவ்வுணர்ச்சிகளுக்குத் தக்க போக்குக்காட்டி  மனதை  அமைதியுடன்  இருக்க  முயற்சிக்கவும். தலைக்கு  பிருங்காமலகாதி தைலம் எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தைத் தலைக்குத் தடவி,  அரை- முக்கால்  மணி நேரம்  ஊறிய  பிறகு,  குளிர்ந்த  நீரில்  குளித்து  வந்தால்,  உடற்சூடு  தணிவதுடன்,  முடி நரைப்பதையும்  தள்ளிப்  போடலாம்.

உடலும்  மனமும்  தனித்து  இயங்குபவையல்ல.  ஒன்றில்  ஏற்படும்  தாபம்  மற்றொன்றிலும்  எளிதில்  பரவிவிடும். உடற்சூட்டைத் தணிக்க  மாதம்  ஒரு
முறையோ இரு மாதங்களில்  ஒருமுறையோ வயிற்றைச் சுத்தமாக்கிக் கொள்ள பேதிக்குச் சாப்பிடுதல், இரவு  படுக்கும் முன் உள்ளங்கால்களுக்கு  எண்ணெய் தடவித் தேய்த்து விடுதல்  முதலியவை  உடலைக் கட்டுக்குலையாமல் பாதுகாப்பதுடன்  தோல்  மென்மையாகவும்  வனப்புடனும்  இருக்கவும்  தலைமுடி கறுத்துச் செழுமையுடன் வளரவும்  உதவுகின்றன.
  
ஆயுர்வேதத்தில்  ரஸாயனம்  எனும் பெயரில்  முடியும் சில  மருந்துகள்  உடல் வனப்பைப்  பாதுகாக்கக் கூடியவை  உதாரணத்திற்கு  நாரஸிம்ஹ ரஸாயனம்,  அகஸ்திய  ரஸாயனம்,  ப்ராம்ஹ ரஸாயனம்,  தசமூல ரஸாயனம் போன்றவை  குடல் சுத்தம்  செய்து கொண்டபிறகு,  உடலுக்கு நன்மை தரக்கூடிய  உணவுகளை  மட்டுமே  சாப்பிட்டு, இந்த  ரஸாயன  மருந்துகளை  ஆயுர்வேத  மருத்துவரின் ஆலோசனைப்படி  சாப்பிட்டு வந்தால்,  நீங்கள்  உங்களுடைய  கல்லூரி நண்பர்களுக்கு நடுவே  இளைஞராகத் தோன்றுவீர்கள்.  மற்றவர்களுடைய  கண்கள்  உங்களையே  மொய்க்கத் தொடங்கும் பெரும் மதிப்புடன்  உலாவரத் தொடங்கலாம்.
(தொடரும்)


பேராசிரியர்எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணூர் விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் பலி

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நலம் விசாரித்த செந்தில் பாலாஜி

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

ஈச்சி எலுமிச்சி... சான்வே மேகனா!

SCROLL FOR NEXT