சிரி... சிரி...
""எதிர்வீட்டுக் காரருக்கு ரொம்ப பண முடை போலிருக்கு....!''"" எப்படி சொல்றீங்க...?''""சைக்ளோன் வருதாம்னு சொன்னா, சைக்கிள் லோனா...? எப்ப சார் வருது?'' ன்னு கேக்கறாரே....!
தினமணி கதிர்சிரி... சிரி...
""எதிர்வீட்டுக் காரருக்கு ரொம்ப பண முடை போலிருக்கு....!''"" எப்படி சொல்றீங்க...?''""சைக்ளோன் வருதாம்னு சொன்னா, சைக்கிள் லோனா...? எப்ப சார் வருது?'' ன்னு கேக்கறாரே....!
""எதிர்வீட்டுக் காரருக்கு ரொம்ப பண முடை போலிருக்கு....!''
"" எப்படி சொல்றீங்க...?''
""சைக்ளோன் வருதாம்னு சொன்னா, சைக்கிள் லோனா...? எப்ப சார் வருது?'' ன்னு கேக்கறாரே....!
""தலைவர் என்ன தொண்டர்களை "கரோனா கும்பல்' னு திட்றாரு?''
""யாருமே கட்டுப்பட மாட்டேங்கிறாங்களாம்!''
=வி. ரேவதி,
தஞ்சை.
""வீட்டுல தான் நிம்மதி இல்லை. இப்ப அரசியல்லயும் நிம்மதி போயிடுச்சின்னு தலைவர் புலம்பறாரே, ஏன்?''
""அவரோட மனைவி இப்ப ஊராட்சித் தலைவராயிட்டாங்களாம், அதான்!''
= கே.ஆர். உதயகுமார்,
சென்னை =1.
அவர் : படம் முடிஞ்சு தியேட்டரை விட்டு எல்லாரும் வெளியே வரும் போது சிரிச்சுனே வர்றாங்க அந்த ஆள் மட்டும் ஏன் அழுதுனே வர்றாரு ?
இவர் : அவரு படத்தோட தயாரிப்பாளர்ங்க அதான் .
அவர் : அந்த ஆளுக்கு கடன் கொடுத்தா சுகர் குறைஞ்சுடும்
இவர் : எப்படி?
அவர் : கடனை திருப்பி கொடுக்க நடையா நடக்க வைப்பாரே!
=தீபிகா சாரதி,
சென்னை =5
""ஏன் சார் இங்க பஸ் இப்ப வருமா?''
""வந்தாலும் வரும், வராமலும் இருக்கும்.''
"" அது சரி, நீங்க என்ன வேலையில இருக்கீங்க?''
"" வானிலை ஆராய்ச்சி இலாகாவுல....''
= எம் அசோக் ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.