முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர்

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டுமரணம் அடைந்தார்.

தினமணி கதிர்

திரைக்கதிர்

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டுமரணம் அடைந்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
பகிர்:

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டுமரணம் அடைந்தார்.

அவர் கடைசியாக, "ஜேம்ஸ்' என்ற படத்தில் நடித்திருந்தார். சேத்தன் குமார் இயக்கியுள்ள இதில் பிரியா ஆனந்த், சரத்குமார், ஆதித்யா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

புனித் ராஜ்குமாருக்கு, அவர் அண்ணன் சிவராஜ்குமார் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அவரும் அவருடைய மற்றொரு சகோதரரான ராகவேந்திரா ராஜ்குமாரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இதில் புனித் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். புனித் படத்திலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் தயாரான படம். இந்த படம் புனித்தின் பிறந்த நாளான மார்ச் 17-ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது.கர்நாடகாவில் மட்டும் 400 திரையரங்குகளில் பார்க்கலாம். நாடு முழுவதும் 4 ஆயிரம் காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன.

-----------------------------------------


சென்னையில் 3 ஸ்டுடியோக்களை வைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், முதல்முறையாக துபையிலும் தனக்கென ஸ்டுடியோவைத் திறந்துள்ளார். இதற்கு ஃபிர்தவ்ஸ் ஸ்டுடியோ என பெயர் வைத்துள்ளார். "ஃபிர்தவ்ஸ்' என்ற அரபி சொல்லுக்கு சொர்க்கம் என்பது அர்த்தம். இந்த ஸ்டுடியோவுக்கு பல்வேறு இசை பிரபலங்கள் வந்து சென்றனர். சமீபத்தில் இளையராஜாவும் அங்கு சென்றார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பணிகளைப் பார்த்து, அவரைப் பாராட்டினார். இந்நிலையில் இந்த ஸ்டுடியோ பற்றிய புதிய தகவல் கசிந்துள்ளது. முழுக்க முழுக்க பெண் இசைக் கலைஞர்களால் இந்த ஸ்டுடியோ அமைக்கப்பட்டதாம். மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கநாடுகளைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞர்கள் இந்த ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார்கள். இங்கிருந்து சர்வதேசப் படங்களுக்கு இசை அமைக்கும் பணிகளை ரஹ்மான் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வெளிநாட்டு பிரபலங்கள் ரஹ்மானை சந்திக்க இந்த ஸ்டுடியோவுக்குதான் இனி வரவேண்டியிருக்கும். அத்துடன் துபையிலிருந்து சில சர்வதேச ஆல்பங்களையும் உருவாக்க ரஹ்மான் முடிவு செய்திருக்கிறார். அதற்கும் இந்த ஃபிர்தவ்ஸ் ஸ்டுடியோவை அவர் பயன்படுத்திக் கொள்வார்.

-----------------------------------------

தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிராஉள்ளிட்ட மாநிலங்களில் வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை விஜய்யின் "தளபதி' மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் விஜய்யின் உத்தரவின்படி , அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துஆலோசனையின்படி அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக்ஒழிப்பை ஊக்குவிக்க பிரசாரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது . இது ஒவ்வொரு வாரமும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எஸ். அம்பேத்குமார் தயாரித்து வரும்படம் "ரேக்ளா'.பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, "வால்டர்' பட இயக்குநர் அன்பு இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

பிரபுதேவாவின் நடிப்பில் 58-ஆவது படமாக உருவாகும் "ரேக்ளா' படத்தின் படப்பிடிப்புசென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் "ஃபைவ் ஸ்டார்' கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து "ரேக்ளா' படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

-----------------------------------------

இந்திய கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பேவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றுப் படமான "கெளன் பிரவின் தாம்பே?'படத்தில் மூத்த முன்ணனி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் கடுமையாகப் போராடி தனது 41-ஆவது வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய சுழற்பந்து வீச்சாளரின் கதை.

பிரவின் தாம்பே பாத்திரத்தில் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே நடித்துள்ளார். ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்பிரதா சாட்டர்ஜி, அஞ்சலி பாட்டீல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →