தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உலோகங்கள் உடலுக்கு நல்லதா?

எனக்கு மூன்று அக்கா. அவர்களுடைய வீட்டுக்கு எப்போது சென்றாலும் ஏதாவது மணிமாலை வாங்கி வருமாறு வற்புறுத்துகிறார்கள்.  இதில், அப்படி என்னதான் உள்ளது? ஆயுர்வேதத்தில் பதிலுள்ளதா?

எஸ். சுவாமிநாதன்

எனக்கு மூன்று அக்கா. அவர்களுடைய வீட்டுக்கு எப்போது சென்றாலும் ஏதாவது மணிமாலை வாங்கி வருமாறு வற்புறுத்துகிறார்கள்.  இதில், அப்படி என்னதான் உள்ளது? ஆயுர்வேதத்தில் பதிலுள்ளதா?

-சுந்தரநேசன், கோவை.

"ப்ரபாவம்' என்ற ஒரு விஷயமிருக்கிறது. கண்களாலோ ஆராய்ச்சியின் மூலமாக அறிய முடியாத விஷயமாகும். இந்த ப்ரபாவத்தின் வழியாக நீங்கள் குறிப்பிடும் தங்கம், வெள்ளி, பவழம் போன்றவை எண்ணற்ற பலன்களை வெளிஉபயோகத்தினால் செய்யக் கூடியவை. 

பதினெட்டு வகையான சம்ஸ்காரங்களைப் பயன்படுத்தி, இவற்றை சுத்தப்படுத்தி நுண்ணிய துகள்களாக மாற்றி உள்ளுக்குப் பயன்படுத்தும் முறையையும் நம் முன்னோர் நன்கறிந்திருந்தனர்.  அப்படிப் பயன்படுத்தும்போது, அவற்றில் அடங்கியுள்ள சுவை- விபாகம்- வீரியம்- ப்ராபவம் போன்றவற்றின் வாயிலாக, எதன் சக்தி இவற்றில் அதிகமுள்ளதோ அதன் வழியாகச் செயலாற்றி பல நன்மைகளைச் செய்கின்றன. பலகாலம் பூமியில் புதையுண்டு கிடைக்கும் தங்கத்துக்கு நிகராக வெள்ளியையோ மற்ற உலோகங்களையோ குறிப்பிட முடியாது. இந்தப் ப்ரபாவம் பற்றிய சிறிய விளக்கம் ஒன்றைக் கூறினால் உங்களுக்குத் திருப்தி ஏற்படலாம்.

சுவை- விபாகம்- வீர்யம் போன்ற அனைத்தும் நாகதந்தி எனும் வேரிலும் கொடுவேலி எனும் வேர்ப்பட்டையிலும் சமமாக அமைந்திருந்தாலும், நாகதந்தி வேரை பொடித்துச் சாப்பிட்டால் பேதியாகும். அதுவே கொடுவேலி வேர்ப்பட்டை செய்யாது. "தந்தியாரிஷ்டம்' எனும் ஆயுர்வேத மருந்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கலால் ஏற்படும் உள்மூலம், வெளிமூலம் போன்றவை நீர்ப்பேதியாகி குணமாகும்.  இதற்கு "ப்ராபாவம்' என்று பெயராகும். 

அதிமதுரமும், திராûக்ஷயும் சுவை ஆகியவற்றில் ஒன்றாகவேயிருப்பினும், திராûக்ஷ பேதியை ஏற்படுத்தும். அதிமதுரம் ஏற்படுத்தாது.

நெய், பாலின் குணத்தோடு சமமமாயினும், நெய் பசியைத் தூண்டும்.  ஆனால், பால் பசியைத் தூண்டாது. மாறாக, பசியை அடக்கிவிடும். 

திராûக்ஷயைக் கொண்டு தயாரிக்கப்படும் திராக்ஷôதி கஷாயம், திராக்ஷôரிஷ்டம் போன்றவை நல்ல மலமிளக்கியாகப் பயன்படும். அதிமதுரத்தைப் பொடித்து,  தேன் கலந்து சாப்பிட, தொண்டைக் கட்டு, புண், சளி, குரல்வளை கம் முதல், ரத்தக் கசிவு போன்றவை குணமாகும்.  நெய்யில் மாதுளப் பழத்தோல், சுக்கு, திப்பிலி போன்றவை சேர்த்துக் காய்ச்சப்படும். "தாடிமாதிகிருதம்''  எனும் நெய் மருந்து பசியைத் தூண்டி உணவேற்கச் செய்து, சோகை நோயை குணப்படுத்துகிறது.  திரிபலையைப் பாலுடன் கலந்து சாப்பிட, பசி அடங்குவதுடன் குடல் புண்களை விரைவில் ஆற்றிவிடும்.

பூமியில் எந்த ஒரு பொருள் தோன்றினாலும் அவை நிலத்தை ஆதாரமாகக் கொண்டு, தண்ணீரைக் காரணமாகக் கொண்டு உண்டாகின்றன. நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகியவற்றின் சேர்க்கையால் பொருட்களுக்கு உருவமும், தனித்தன்மைகளும் அமைகின்றன. நிலத்தை ஆதாரமாகக் கொண்டு தண்ணீருடன் சேருகையில், அந்தந்தப் பொருட்களுக்குத் தனி உருவம் அமைவதற்காக, நெருப்பு வேகவைப்பதும், வாயு நீட்டுவதும், ஆகாயம் இடம் கொடுப்பதும் அமைகின்றன.

இப்படி பஞ்சபூதங்களின் வெவ்வேறு அளவு அல்லது நிலைமை காரணமாக, தங்கம்- வெள்ளி- பவழம்- முத்து- மரகதம் போன்றவை பல உருவங்களில் வெளிவருகின்றன.

தங்கமும் வெள்ளியும் நெய்ப்பு- இனிப்பு- குளிர்ச்சி போன்ற சமமான குணங்களைப் பெற்றிருப்பதாலும் தங்கம் உடலை விஷங்களிலிருந்து பாதுகாக்கிறது.  உடல் ஊட்டத்தை உறுதியாக்குகிறது. வெள்ளியின் பயன்பாடு இளமையைத் தக்க வைக்கிறது. உட்புற உபயோகத்தினால் தேவையற்ற கழிவுகளை உரசி வெளியேற்றுகிறது. குடல் வாயு- பித்த எரிச்சலைக் குணப்படுத்துகிறது. இது ப்ராபாவத்தின் சிறப்பால் அரங்கேற்றப்படுகின்றன.

மாணிக்கம், நீலமணி, புஷ்பராகம், வைடூர்யம், முத்து, வைரம், ஸ்படிகம் போன்ற கற்கள் மற்றும் அதுபோன்ற கற்கள் குளிர்ச்சியானவை, கண்பார்வையை சீராக்குபவை, பாபம், அமங்களம்,. விஷம் நீக்குபவை. நீண்ட ஆயுள், தனம், மகிழ்ச்சி, பலம், சுறுசுறுப்பு ஆகியவற்றை தம் ப்ரபாவத்தின் தன்மையால் அளிப்பவை. அதனால் தங்கள் சகோதரிகளைப் பாராட்டலாம். சூட்சுமம் அறிந்தவர்கள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT