முகப்பு
தினமணி கதிர்

உயிரைக் காத்த  ஐபோன்..!

அமெரிக்காவில் பள்ளத்தாக்கில் சிக்கி உயிருக்குப் போராடிய இருவர் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன்-14  ஸ்மார்ட்போன் மாடல் மூலம் காப்பாற்றப்பட்டு,  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Updated On : 8 ஜனவரி, 2023 at 6:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:09 AM


அமெரிக்காவில் பள்ளத்தாக்கில் சிக்கி உயிருக்குப் போராடிய இருவர் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன்-14  ஸ்மார்ட்போன் மாடல் மூலம் காப்பாற்றப்பட்டு,  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
செல்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஐபோன்-14 மாடலை அறிமுகம் செய்தது.  இதில் பல்வேறு சிறப்பு வசதிகளை இணைத்திருந்தது. அதில்,  ஒன்று எஸ்ஒஎஸ் வசதி. இதைப் பயன்படுத்தி ஒருவர் மொபைல் நெட்வொர்க்,  வை-பை இல்லாத இடத்திலும் அவரச உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையில்,  கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஏஞ்சல் வனப் பகுதியில் காரில் இருவர் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், இருவரும் காருடன் பள்ளத்தாக்கில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடினர். இருவரில் ஒருவர் தான் வைத்திருந்த ஐபோன்-14 ஸ்மார்ட்போன் மாடலில் உள்ள எஸ்ஓஎஸ்(அவசரக் கால அழைப்பு வசதி) வசதியைப் பயன்படுத்தி உடனடியாக அவசரக் கால உதவி மையத்துக்குத் தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் 300 அடி பள்ளத்தாக்கில் சிக்கி உயிருக்குப் போராடிய இருவரையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.
இந்த எஸ்ஓஎஸ் வசதி நமது ஸ்மார்ட்போனில் எப்படி வேலை செய்கிறது என்றால், நெட்வொர்க் மற்றும் வை-பை இணைப்பு இல்லாத இடத்தில் எஸ்.ஓ.எஸ். பட்டனை அழுத்தும் போது நேரடியாக சேட்டிலைட் மூலம் அவசர உதவி மையத்திற்குத் தகவல் பரிமாறப்படுகிறது. இதன்மூலம் அவசர உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஐபோன் மட்டுமல்ல ஆப்பிள் வாட்சும் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. குறிப்பாகத் தனது கணவரால் கொலை செய்ய முயன்ற 42 வயது பெண்ணை ஆப்பிள் வாட்ச் இருந்த எஸ்ஒஎஸ் வசதி மூலம் காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.