முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

''மச்சான். ஏ.டி.எம். கார்டுக்கு பதிலா ஆதார் கார்டை எடுத்துட்டு வந்துட்டேன். அவசரமா ஆயிரம் ரூபாய் கிடைக்குமடா?''

தினமணி கதிர்

சிரி... சிரி...

''மச்சான். ஏ.டி.எம். கார்டுக்கு பதிலா ஆதார் கார்டை எடுத்துட்டு வந்துட்டேன். அவசரமா ஆயிரம் ரூபாய் கிடைக்குமடா?''

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:12 PM
பகிர்:

''மச்சான். ஏ.டி.எம். கார்டுக்கு பதிலா ஆதார் கார்டை எடுத்துட்டு வந்துட்டேன். அவசரமா ஆயிரம் ரூபாய் கிடைக்குமடா?''
''சாரிடா.. நீ வேற. நானும் ஏ.டி.எம். கார்டுக்கு பதிலா ரேஷன் கார்டை எடுத்துட்டு வந்துட்டேன்டா..''

காகிதப்பட்டறை க.கலா,
திருவிடைமருதூர்.

''மாப்ளே. எனக்கு ஞாபக மறதி அதிகமா
இருக்குடா?''
''மச்சான் கடன் உனக்கு கொடுத்திருக்கேன். நீ
வாங்கியிருக்கே. மறந்திடாதடா?''

வீர.செல்வம்,
பந்தநல்லூர்.


''மச்சான் நாம வெற்றிக் கொடி கட்டணும்!''
''அந்தக் கொடி எந்தக் கடையில் கிடைக்கும்!''

ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.


''மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு சொன்ன வாத்தியார் கனவை எப்படிடா பொய்யாக்கினே?''
''சவூதிக்கு போய் ஒட்டகம் மேய்ச்சுதான்!''

சௌமியா சுப்ரமணியன்,
பம்மல்.

''ஏன்டா. ஸ்கூல் விட்டு வரும்போது, அழுதுகிட்டே வர்றே?''
''பாதி தூக்கத்தில்.. பெல் அடிச்சிட்டாங்கடா?''

ஐ.லட்சுமி மணிவண்ணன்,
நாகை.



''பேய் கதைகளை எத்தனை வருஷமா எழுதுறீங்க?''
''எனக்கு கல்யாணம் ஆனதிலிருந்து இன்னிக்கு வரைக்கும் முப்பது வருஷமா எழுதிட்டிருக்கேன்!''



''என்னடா இது. குடுத்த பணத்தைக் கேட்டா, முதலையை பிடிச்சு கொண்டு வந்திருக்கீங்க?''
''வட்டி வேண்டாம். முதலை கொடுத்தா போதும் நீதான்டா சொன்னே!''

அ.செந்தில்குமார்,
 சூலூர்.

''ஏன்டா? அவனைச் சுற்றி ஏன் ஒரே கூட்டம்?''
''அவன் எல்லோருக்கும் 'கட்டில் கதைகள்' சொல்றான்.''



''ஏன்டா.. நடந்து வரும்போது ஏன் இப்படி ஜெர்க் ஆகி நிற்கிறே?''
''காரில் போறதா நெனச்சு திடீர்னு பிரேக் போட்டுட்டேன்!''



''ரயிலடி வரை நடந்து போய் வரலாமா?''
''ரயில்வே கேண்டீனில் டிபன் வாங்கித் தருவதா இருந்தால் வர்றேன்டா!''

பர்வதவர்த்தினி,
பம்மல்.

''மச்சான். இந்த ஹோட்டல் ஊழியர்கள் ரொம்ப சுறுசுறுப்பு சார்!''
''அதுக்காக சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள இலையை எடுக்கறது ரொம்ப ஓவர்தான்டா!''





'' செல்போன் ஏன்டா இப்படி அலறுது!''
''சைலன்டுல இருந்ததை யாரோ வயலென்ட் மோடுல மாத்தியிருக்காங்க?''

வி.ரேவதி,
தஞ்சாவூர்.

''ஏன்டா உங்க ஆபிஸில் டூவீலர் கொடுக்கறேன் சொன்னாங்களே. வேண்டாமுன்னுட்டே!''
''டிரைவர் கேட்டேன். தர்ற மாட்டேன் சொல்லிட்டாங்க. அதான்!''





''அந்த ஹோட்டல் முதலாளி விளம்பரம் பண்றதில் கில்லாடி!''
''இருக்கலாம். அதுக்காக பேப்பர் ரோஸ்ட்ல கூட விளம்பரம் போடலாமாடா?''

தீபிகா சாரதி,
சென்னை.
 

முழு கட்டுரையைப் படிக்க →