சிரி... சிரி...
'கனவில் நடிகை வந்தாங்கன்னு ஏன் கஷ்டப்படுறே...'
'கனவா இருக்கேன்னுதான்...'
Advertisement
'திட்டினா கூட என் மருமகள் சிரித்தபடியே இருக்கா?'
'நிஜமாவா சொல்றே..?'
'டி.வி.யில் 'ஆங்கரா' இருக்கிறதா அதான்..'
'டி.வி.யில் 'ஆங்கரா' இருந்த என் பொண்ணு இப்போ நல்லா நடிக்க ஆரம்பிச்சுட்டா...?'
'எப்படி சொல்றே...?'
'அவளுக்கு சிரிப்பைவிட அழுகை நல்லா வருதாம்.. அதான் சான்ஸ் கிடைச்சிருக்கு.'
'அவர் ரொம்ப மரியாதை தெரிஞ்சவர்...'
'எப்படி சொல்றே...'
'டி.வி.யில் நியூஸ் வாசிக்கிறவங்க வணக்கம் சொன்னாகூட பதிலுக்கு வணக்கம் சொல்வாருன்னா பாருங்களேன்...'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
'சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கேன்..'
'சரிங்க.. நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்திடறேன். கொஞ்சம் லேட் ஆனா என்னங்க பண்றது..'
'ஒன்றும் பிரச்னை இல்லை. டிக்கெட் நாளைக்குதான் வாங்கிட்டு வந்திருக்கேன்...'
-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
'படத்துல வர்ற கனவு சீனை உச்சி வெயிலில் எடுக்கிறாங்களே ஏன்..'
'அது 'பகல் கனவு' சீனாம்...'
'ஹீரோவும், ஹீரோயினும் கொடைக்கானல் போறப்ப ஹீரோயின் குணா குகைக் குழியில் விழுந்துடுறாங்க? கட் பண்ணா..'
'என்ன ஆச்சு...'
'ஹீரோ வேறொரு ஹீரோயின்கூட டூயட் பாடுறார்..'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'நடிகையை கல்யாணம் பண்ணினியே.. என்னடா ஆச்சி...'
'கல்யாணமே நடிப்புன்னு சொல்லிட்டாடா..'
-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
'பொண்ணை கொஞ்சம் மார்டனா வளர்த்துட்டோம்...'
'அதுக்காக மாப்பிள்ளை வீட்டார் முன்னாடி 'காவாலா' பாட்டை தமன்னா மாதிரி ஸ்டெப்ஸ் போட்டு பாடி ஆடுறதா?'
-எஸ்.தேவராஜ், காஞ்சிபுரம்.
'நம்ம படத்துக்கு மாநகராட்சி கூடுதல் வரி விதிச்சிருக்கா...?'
'ஆமா சார்.. குப்பை வரியாம்...'
'அந்த டைரக்டர் கதை இதுவரை லீக் ஆனதே இல்லையா?'
'ஆமா.. அவர் கதையே இல்லாம படம் எடுக்கிற ஆளாச்சே...?'
-அஹ்மத், சேலம்.
'சீரியலில் சிறந்த நடிகைக்கான விருது உங்களுக்குக் கிடைச்சிருக்கே.. என்ன சொல்ல விரும்பறீங்க?'
'சிறந்த பாட்டி விருது கிடைக்கிற வரைக்கும் அதே சீரியலில் தொடர்ந்த நடிக்க விரும்புகிறேன்..'
-ப.சோமசுந்தரம், சென்னை-129.