""எனது கணவருக்கு இப்போவெல்லாம் பார்வை சரியாக இல்லை டாக்டர்...''
""ஆமாம். அவர் நர்ஸை ஒரு மாதிரியா பார்த்தப்பவே சந்தேகப்பட்டேன் மேடம்...''
*****
""பேஸ்மேக்கர் ஓல்டேஜ் ஸ்டெபிலைசர் மாதிரி சார்...''
""ஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசரா? ஓல்ட் ஏஜ் ஸ்டெபிலைசரா டாக்டர்..''
*****
""பையனுக்கு மன அழுத்தமுன்னு டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போனீங்களே என்ன ஆச்சு...''
""ஒரு மன அழுத்தத்தைப் போக்க இன்னொரு மன அழுத்தம்தான் சரியாகும். கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லிட்டாரு..''
*****
""ஞாபக மறதிதானே உங்க பிரச்னை..''
""எப்படி டாக்டர் கண்டுபிடிச்சீங்க..''
""நீங்கதான் உங்க மனைவியோட ஹேன்ட் பேக்கை மாட்டிக்கிட்டு வந்திருக்கீங்களே...''
*****
""டாக்டர்கிட்ட போயிட்டு வந்த உன் புருஷன் ஏன் திரு..திரு...வென முழிக்கிறாருடி..''
"" மூணு திருவை கடைபிடிக்கணும்னு டாக்டர் சொன்னாராம். "தனித்திரு.. விழித்திரு.. பசித்திரு..'ன்னு.. அதான்..''
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
""பேமிலி டாக்டர் தெரியும். அதென்ன பேமிலி நர்ஸ்...''
""ட்ரீட்மென்ட் போன இடத்துல நர்ûஸ காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டேன்..''
-அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
""ஊசி போட்டதும் டாக்டர் மயங்கி விழுந்துட்டாரா.. ஏன்..?''
""ஊசி எனக்கு போடலை.. டாக்டருக்குதான் போட்டாங்க..''
-அ.செந்தில்குமார், சூலூர்.
*****
""கால் கட்டை பிரிச்ச அப்புறம் ஒரு வாரத்துக்கு நீங்க யார் கையையாவது பிடிச்சு நடக்கணும்.''
""அதுக்கு உங்க நர்ஸ் ஒத்துப்பாங்களா டாக்டர்.''
-வி.சாரதி டேச்சு, சென்னை.
""அந்த டாக்டர் போலி டாக்டருன்னு எப்படி சொல்றே..''
""காலில் பிரஷர் செக் பண்றாரே...''
*****
""ரவுண்ட்ஸ் வந்த டாக்டரம்மா ஏன் டிவி. பார்த்த பேஷண்டை திட்டிட்டு போறாங்க?''
""அவங்க சொன்ன சீரியலை விட்டு வேற சீரியல் பார்த்தாங்களாம்..''
-அ.ரியாஸ், சேலம்.
""அடிக்கடி ஊரைவிட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்...''
""அடிக்கடி எல்லோர்கிட்டேயும் கடன் வாங்கினா அப்படிதான் வரும்..''
*****
""அடிக்கடி மனக் கவலை வருது டாக்டர்..''
""இப்போ உங்களுக்கு என்ன கவலை வந்துச்சு..''
""உங்களுக்கு ஃபீஸ் கொடுக்க பணமில்லைன்னு...''
- இந்து குமரப்பன், விழுப்புரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.